பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாறுபட்டன என்பதினை நாவலர் பாரதியார் தம்முறையில் பின்வருமாறு எடுத்துக்காட்டி மறுக்கின்றார்.

'இன்னுரை சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு வஞ்சியியல்பை இழிதகுபழிதரு பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது. ‘எஞ்சாகிண்ணசை' என்ற தொடர், அதை அடுத்து நிற்கும் 'வேந்தனை” என்னும் இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையாய் அமைவது வெளிப்படை. அவ்வளவிற்கு கொள்ளாகல் அத்தொடரைப் பின்வரும் வேந்தன்” எனவரும் எழுவாய்ச் சொல்லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகும் என இவ்வுரைகாரர் விளக்குகின்றார். மன்னர் போர்கருதிப் படையெடுப்பதன் நோக்கமெல்லாம் பிறர் மண் கவரும் வேட்கைதான் எனும் கொள்கை நாகரிகவுலகம் மதிக்கும் போரறம் அழித்துப் பழிக்கு இடனாக்கும், தக்க காரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார் மண்வேட்கையானே படையெடுத்துச் சென்று வென்று கவர்தலே வஞ்சித்திணை யென்று கூறுவது, உயர்ந்த பழந்தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத்தகும் பிழையாக்கி முடிப்பதாகும். வலிச்செருக்கால் மெலியார் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்டேனும், அதனை வெறுத்து விலக்குவதன்றி வேத்தியல் அறமாக்கி வஞ்சியொழுக்கமெனச் சிறப்பித்து ஒருதிணை வகையாக்குவது, அறனறிந்து மூத்த தொல்காப்பியர் நூற்பெருமைக்கு இழுக்காகும். அஃது அவர்கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிவிக்கின்றது. இச்சூத்திரத்தில், ‘எஞ்சா மண்ணசையால் இரு வேந்தர், என்னாமல், ‘எஞ்சாமண்ணசையால் வேந்தனை' என்றமைத்ததால் முன்னுரைகாரர் பொருள் தொல்காப்பியர் கருத்தன்றென்து தேற்றமாகும்.’’.

'படையொடு பிறர்மேற் சொல்லலுதற்கு மண்ணாசையே நோக்கமாயின், அது உயரொழுக்கமாகாமல் துன்பம் தவா. அது மேன் மேல்வரும் இழுக்காகும். இனி, மண்வேட்கையால் தன் மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளா விருப்பது ஆண்மையறம் அழிப்பதாகும், அதனால்

14

14