பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ககள் இ அதி வெனப்படாமையானும், நேர்பசை நிரையசை யாகாவென்பது: அற்றன்றியும், அவை நேர்பசை நிரைபசையாதல் ஒருவகை யான் நேர்ந்தானெனினும் அவை நானுத்தளை விரவுக்கொடி யென்னுஞ் சீராதற்கு இழுக்கென்னையெனவும், "நிரையிறு காலையும் ஆசிரிய வுரிச்சீர்' என ஒதி, ஆசிரியவுரிச்சீரெட்டென்பான்போல விதந்தோதிப் பயந்ததென்னை யெனவுங் கூறி மறுக்க.2 இனி ஒருரை : 'து உமணி கெழுஉமணி” என்பன, அளபெடை அசைநிலையாகியும் ஆகாதும் வருதலின் வெண்சீர்க்கும் இருநிலைமை கோடற்கென்ப. அது நீடுகொடி குளிறுபுலி என்பனவற்றிற்கும் ஒக்குமாதலானும், 'அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்துங்கால்’ அங்ங்னம் அசையாகாமையானும் அது பொருந்தாதென்பது.? இங்ங்னஞ் சீர்நிலையெய்திநின்ற அளபெடைகளெல்லாம் வழக் கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாயினவுஞ் செய்யுட்கே உரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்துகொள்ளப்படுவனவுமென இருவகைய. அவ்விருதிறத்தவும், 'நீட்டம் வேண்டி னவ்வள புடைய’ (தொல் - எழுத்து. 6) 1. நெடில் மூன்று மாத்திரையாய் நீண்டொலித்தல் வேண்டிக் கொள்ளப்பட்டது அளபெடை. நானுத்தளை என்பதுபோலப் புணர்ச்சி விகாரத்தாலன்றி இயல்பாகவந்த எழுத்து அளபெடை. நிலைமொழித்தொழிலாகிய உகரம் பெற்றன அளபெடை எனப்படாமையின் தேர்பு நிரைபு என்னும் அசைகட்கு தூஉ' 'கெழுஉ எனவரும் அளபெடை உறுப்பாதலில்லை என்பதாம். 2. இத்தொடரில் பேராசிரியர் குறித்தபொருள் இதுவென விளங்கவில்லை. 3. இனி, து உமணி, கெழுஉமணி என்பவற்றிற்கு அளபெடையை அசைநிலையாகக்கொண்டு நேர்நிரை, நிரைநிரை, என ஈரசைச்சீராகவும், அளபெடையை அசைநிலைமை யாக்காது நேர்நிரைநேர், நிரைநிரைநேர் என வெண்சீராகவும் கொள்ளும் இருநிலைமையும் உண்டென்பர். இங்கனம் எழுத் தெண்ணப்படுதலும் படாமையும் நீடுகொடி குளிறுபுலி என்புழி இருவகையுகரத்திற்கும் ஒக்குமாதலானும் அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்துங்கால் அங்கனம் அசைநிலையாகாமையானும் ஓரிடத்திற்பயின்ற அளபெடைக்கே சீர்நிலையெய்தலும் அசைநிலையாதலுமாகிய இரு நிலைமையும் உண்டென்றல் பொருந்தாது என்பதாம்.