பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக வாரு ஆஅழி என்பது மூவெழுத்துப் பாதிரி. வடாஅது என்பது மூவெழுத்துக் கணவிரியாம். படாஅகையென நாலெழுத்துக் கணவிரியாம். ஆஅங்கு என ஈரெழுத்துப் போரேறாம். ஆஅவது என மூவெழுத்துப் பூமருது. புகாஅர்த்து என்பது கடியாறாம். பராஅயது என்பது மழகளிறாம். இவை ஒரே சொல்லாகி நின்று எட்டியற்சீரானும் அளபெடுத்தன. ‘'தேஎந் தேரும் பூஉம் புறவிற் போஒரி துள்ளுஞ் சோஒளி நண்ணிக் குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவல ரடாஅரின் வைத்த கானெறிச் சென்றனர் கொல்லோ மேனெறிச் சென்று பொருள்படைப் போரே' இதனுள் இயலசை மயங்கிய இயற்சீர் நான்கும் வந்தன. ஒழிந்த நான்கும் இவற்றுள் அடங்கும். இங்ங்னம் சீர்நிலையெய்திய வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயது இயற்கையளபெடை என்றும், செய்யுட்குப் புலவர் ஒசை கருதிச் செய்து கொண்டது செயற்கையளபெடை என்றுங்கொள்க;2 இவ்விதி கட்டளை யடிக்கென்றுணர்க. இவை சீர்நிலையடிக்காயிற் றணிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை எனக்கொள்வர். “ஆஅ வளிய வலவன்’ எனவும், 'ஏனர் சிதைய வழாஅ லெல்லாதின் சேஎயரி சிந்திய கண்' எனவுமிவை நேர்நேரும் நிரைநேருமாக அலகிடுப, இனி ஒரசையாங்காற் செயற்கையளபெடை சீர்நிலையாதல் செய்யுட் 1. வடாஅது ' என்பது மூவெழுத்துக் கணவிரியாம், ட!!.ாஅகை’ என நாலெழுத்துக் கணவிரியாம்' என இத்தொடரைத் திருத்திப்படிக்க. 2 . இயற்கையளபெடை என்பது, சீர்நிலையெய்தி வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயது. செயற்கையளபெடை என்பது செய்யுட்கு ஓசை கருதிப் புலவர்களாற் செய்து கொள்ளப்படுவது. அளபெடை அசைநிலையாகும் என்ற இவ்விதி எழுத்தெண்ணி வகுக்கப்பெறும் கட்டளையடிக்குரியதாகும். இவ்வளபெடை சீர்நிலையடிக்காயின் தனி நிலை, முதனிலை, இடைநிலை , இறுதிநிலை என நால்வகைப்படுத்துரைக்கப்படும். செயற்கையளபெடை ஒரசையாமிடத்துச் செய்யுட்கேயுரியவாய்வரும். அது போன்றே இயற்கையளபெடை அசைநிலையாதல் செய்யுட்கேயுரியதாகும்.