பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கடம் ளகரு என மாசேர்சுரமும், புலிசேர்சுரமும் வந்தன. "முன்றிலாடு மஞ்ஞை மூதிலை கறிக்கும்” என மாசெல்காடு வந்தது. “அஸ்ரிநாறு துவர்வா யமர்த்த நோக்கின்’ எனப் புலிசெல்காடு வந்தது. 'கண்போன் மலர்ந்த வண்டுமயங்கு தாமரை” என மாசெல்கடறு வந்தது. 'கரடிவழங்கு குன்று கண்டு போகி’ எனப் புலிசெல்கடறு வந்தது. 'காடுதோ வுழிதருங் கடுங்கண் யானை' எனப் பாம்புசேர்வாய் வந்தது. 'சந்து சிதைய வுழுத செங்குரற் சிறுதினை' எனப் பாம்புவருவாய் வந்தது.

  • **

'மருந்துநாடகத் திருந்து சிலம்பிற் சேக்கும் எனக் களிறுசெல்வாய் வந்தது. 'கடலுகவரி விழிந்து கான்யாறு வரித்த’ எனக் களிறுவருவாய் வந்தது. பாம்புவருவாய் களிறுவருவாய் என்ற இரண்டும் நேர்பும் நிரைபும் முன் வருதலின் நிரைநடு வாகிய வஞ்சியுரிச்சீரெனப்படா..? 1. மாரி, கு 'சி என்னும் சொற்கள் இயல்பாகவே ஈரசையால் இயன்ற இயற்சீர்களாதலின் இவற்றுடன் நிரையசையாகிய "ஒடு" என்னும் 2.கு.பினைச் சேர்த்து மூவசைச்சீர் ஆக்குங்கால், அச்சீர்கள் முறையே மா. ரி-யொடு (நேர் தேர் திரை குறிஞ்-சி-யொடு (திரை நேர் திரைத் என வஞ்சியுரிச்சீராகவே ஒசையயப்பன. எனவே இவற்றுக்கு மாரியொடுமாசெல்கரம் எனவும் குறிஞ்சியொடு-புலிசெல்சுரம் எனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வாய்பாடு காட்டுவர். இங்ஙனம் இயல்பாக அமைந்த இச் சீர்களின் ஒசையமைப்பினைக் கூர்ந்து நோக்காது, இவற்றை மா-ரியொ டு (நேர் திரை நேர் - கூவிளங்காய்) எனவும் குறிஞ்-சியொ-டு (திசை திரை தேர் - கருவிளங்காய்) எனவும் நேரீற்று மூவசைச் சீராகக் கொண்டு ஒசை ஆட்டுவர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். 2 தேர் நிரை திரை (கவிளங்கனி) நிரை திரை நிரை (கருவிளங்கனி) என இயலசையால் வருவனவே நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் என வழங்கப்பெறுவனவாதலின் நேர்பு, நிரைபு என்னும் உரிச்சீரினை முதலாகக் கொண்டு நிரையசையினை நடுவிலும் கடையிலும் பெற்று: வருவன நிரைநடுவாகிய வஞ்சியுரிச் சீர் என வழங்கப்பெறா என்பதாம்.