பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. தொல்காப்பியம் - பொருளதிகாரம்-உரைவளம் இதன் றலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யுளுறுப்பெல்லாந் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இதன்பொருள்) மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்து நான்குஞ் செய்யுட்கு உறுப்பென்றவாறு. பிற்கூறிய எட்டும் மேற்கூறிய இருபத்தாறினோடும் ஒருநிகரண அன்மையின், வேறுதொகை கொடுக்கப்பட்டது. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டுதும். (க) இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், செய்யுளிய லென்னும் பெயர்த்து; செய்யுளிலக்கணம் உணர்த்தினமையான் அப்பெயர்த்தாயிற்று. எனவே ஒத்து நுதலியது.ாஉஞ் செய்யுளிலக்கண முணர்த்தலென்பது பெற்றாம். மேற் பாயிரத்துள், 'வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும்” (தொல். பாயிரம்) ஆராய்வலென்று புகுந்தமையால், எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன விராய்க்கூறிப் பொரு ளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறிவந்தான், அப்பொருள்பற்றிச் செய்யுள் கூறுமாதலின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கணமெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது இவ்வோத்தென்பது. எனவே, முற் 1. பிற்கூறிய எட்டு என்பன அம்மை முதலிய எண்வகை வனப்புக்கள். மேற்கூறிய இருபத்தாறாவன மாத்திரை முதல் வண்ணம் ஈறாகவுள்ள சேய்யுளுறுப்புக்கள். இவை இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு இன்றியமையாதன வாகவும் பிற்கூறிய வனப்புக்கள் எட்டும் தனிநிலைச் செய்யுட்கள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைச்செய்யுட்குரியனவாகவும் வருதலின் ஒருநிகரன அன்மையின்’ என்றார். 2. எழுத்ததிகாரத்துஞ் சொல்லதிகாரத்தும் உலக வழக்கிற்குஞ் செய்யுள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளைக் கலந்து கூறிப் பொருளதிகாரத்தில் இதற்குமுன்னருள்ள ஏழியல்களிலும் பெரும்பாலும் உலகவழக்குப் பற்றிய விதிகளேயே கூறிவந்த தொல்காப்பியனார். இவ்வதிகாரத்துட் கூறவேண்டிய செய்யுளிலக்கண மெல்லாம் இவ்வியலால் தொகுத்துக்கூறுகின்றாராதலின் இது செய்யுளிய லென்னும் பெயருடையதாயிற்று. பொருளதிகாரத்தில் அகத்திணையியல் முதலாக முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாகிய விதிகளைக் கூறுகின்றன. செய்யுளியலாகிய இது செய்யுட்கேயுரிய விதிகளைக் கூறுகின்றது.