பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா நட எ-க.அ 6rr 9يf يFS நட எ. பத்தெழுத் தென்ப நேரடிக் கனவே ஒத்த நாலெழுத் தேற்றவங் கடையே, இஎாம்பூரணம் : என் - எனின். அளவடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவடி யெனினும் நேரடியெனினும் ஒக்கும். பத்தெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் அளவடியாம் என்றவாறு. எனவே, பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின் மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம்பெறும். (ங் எ) க. அ. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. இளம்பூரணம் : என்- எனின். நெடிலடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத் தளவு நெடிலடியாம் என்றவாறு.2 எனவே, பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என்றவாறாம். (Th_е9н) 1. ஒத்தநாலெழுத்தொற்றலங்கடையே’ என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம். நேரடிக்கு அளவு பத்தெழுத்து என்பர். ஒற்றெழுத்துக்கள் அல்லாத நிலைமைக்கண் அதன்மேல் நான்கு எழுத்தும் நேரடிக்கு அளவாதற்கு ஒத்தன என்பது அதன்பொருளாகும். எனவே பத்தெழுத்தும், பதினோரெழுத்தும், பன்னிரண்டெழுத்தும், பதின் மூன்றெழுத்தும், பதினான்கெழுத்தும் ஆகிய ஐந்துநிலம் பெறுவது அளவடியென்றவாறாம். அளவடி நேரடியெனவும் வழங்கப்பெறும். 2. இவட்பெறுமென்ப' என்பது பேராசிரியருரையிற் கண்டபாடம். (இ - ள். நெடிலடிக்கு அளவு மூவைந்தெழுத்தே ஈரெழுத்துமிகுதலும் இயல்பு என மொழிப - எழுத்தெண்ணி வகுக்கப்பெறும் கட்டளையடிகளுள் நெடிலடிக்குக் கீழெல்லை பதினைந்தெழுத்தாகும். பதினைந்தின்மேல் பதினாறு, பதினேழு என இரண்டெழுத்து மிக்குவருதலும் அவ்வடிக்குரிய இயல்பாகும். எனவே பதினைந்தெழுத்து, பதினாறெழுத்து, பதினேழெழுத்து என நெலடி மூன்றுநிலம் பெறும் என்பதாம்,