பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்- நூற்பா டி க یiT ۳ ایسی பொருள் கூறுதற்கும் இடமுண்டு; தொல்காப்பியனார் எழுத்தெண்ணிக் கூறப்படும் ஐவகையடிகட்கும் எழுத்தளவின் சிற். றெல்லையும் பேரெல்லையும் ஒருங்குகூறும் முறை இதனாற் புலனாதல் காணலாம். நூற்பா 37. இது கட்டளையடிகளுள் நேரடியாவது இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) பத்தெழுத்து என்று கூறுவது அளவடிக்குச் சிற். றெல்லை; அதன்மேல் நான்கெழுத்துக்கள் கூடி அளவடியாதற்கு ஒத்தன ஒற்றெழுத்துக்கள் எண்ணப்படாத நிலையில் இவ்வெழுத்தெண்ணிக்கை. எ-று. எனவே அளவடியாகிய நேரடிக்கு எழுத்தளவின் சிற்றெல்லை பத்தெழுத்தெனவும் பேரெல்லை பதினான்கெழுத்து எனவும் இவற்றின் இடைப்பட்ட பதினொன்றும், பன்னிரண்டும், பதின் மூன்றும் நேரடியின் அளவெல்லை யெனவும் பத்தும் பதினொன் றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினான்கும் என நேரடி எழுத்தளவால் ஐந்து நிலம் பெறும் எனவும் கொள்ளவைத்தா ராயிற்று. இச்சூத்திரத்தில் ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே’ என இளம்பூரணர் முதலியோர் பாடங்கொண்டனர். 'ஒத்தநாலெழுத் தொற்றலங் கடையே' என யாப்பருங்கல விருத்தி வுரையாசிரியர் கொண்டனர். தொல்காப்பியவுரைகளிற் காணப்படும் ஏற்றலங்கடையே என்ற தொடர் ஏற்றமாய் வாராதவழி என்னும் பொருளைத் தெளிவாகத் தராமையா னும் எழுத்துக்களை எண்ணி அடிகளை ஐவகையாகப் பகுக்கு மிடத்து ஒற்றெழுத்துக்களும் ஒற்றின் தன்மையவாகிய குற்றிய லிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் எழுத்துக்களும் எண்ணப்படா என்பதனை வெளிப்படக் கூறுதல் ஆசிரியர் கடமையாதலானும் ஒற்றலங்கடையே’ என யாப்பருங்கல விருத்தியாசிரியர் கொண்ட பாடமே பொருட்பொருத்த முடைய தாகும். ஐவகையடிகட்கும் நடுவணதாகிய நேரடிக்குக் கூறிய 'ஒற்றலங்கடையே என்றதொடர் இதன்முன் கூறப்பட்ட குறளடி சிந்தடிகளோடும் இதன்பின்னர்க் கூறப்படும் நெடிலடி கழிநெடிலடிகளோடும் சென்றியையும் வண்ணம் இச்சூத்திரத்துட் சிங்கநோக்காக அமைந்துள்ளமை நுணுகியுணரத்தகுவதாகும்.