பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆசிரியவுரிச்சீரடியும் இருவகைப்படும் நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என அவற்றுள், நேர்பீற்றுச் சீரை நேர்பு நேரு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபீற்றுச்சீரும் அவ்வாறே நிரைபு நிரையு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடியும் நேரீறும் நிரையீறும் என இருவகைப் படும். அவற்றுள், நேரீறு நிரைபு நிரையு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். நிரையீறும் அவ்வாறே நேர்பு நேரு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலுமென இருவகைப்படும். அவற்றுள், நேர்பு நேரு (முன்பக்தத் தொடர்ச்சி) (4) நிரையீற்று வஞ்சிச் சீரால் வருவது நிரையீற்று வஞ்சியடி (6) ஒரசைச் சீரால் வருவது அசைச் சீரடி (7) எனச் சீர்வகையால் அடிகள் எழுவகைப் படும். அவற்றுள் இயற்சீரடி நேரீற்றியற் சீரடி நிரையீற்றியற் சீரடி என இருவகைப்படும். நேரீற்றியற் சீரடி நேரீற்றியற்சீரின் முன் நேர்முதல் இயற்சீர், நேர்புமுத லாசிரியவுரிச்சீர், நேர்முதல் வெண்பாவுரிச்சீர், நேர்முதல் வஞ்சியுரிச்சீர், நேர்முதல் ஒரசைச்சீர் என உறழ ஐவகையடிகளும், நிரையீற்றியற்சீரின் முன் நிரைமுதலியயற்சீர், நிரைபுமுத லாசிரியவுரிச்சீர், நிரைமுதல் வெண்சீர், நிரை முதல் வஞ்சியுரிச்சீர், நிரைமுதல் ஒரசைச்சீர் என உறழ ஐவகையடிகளும் என இயற்சீர் நின்று உறழும் அடிகள் பத்தாகும். இவ்வாறே ஆசிரியவுரிச்சீரும் நேர்பீறாகவும் நிரையிறாகவும் நின்று மேற்குறித்த ஐவகைச் சீர்களோடும் உறழ ஆசிரியவுரிச்சீரடி பத்தும், இயற்சீர் நேரீறும் நிரையீறுமாய் நின்று மேற்குறித்த ஐவகைச் சீர்களோடும் முறையே நிரையும் நிரைபும் எனவும் நேரும் நேர்பும் எனவும் மாறியுறழ இயற்சீர் வெள்ளடிபத்தும், வெண்சீர் நின்று மேற்குறித்த ஐவகைச் சீர்களுடன் நேர் நேர்பாய் ஒன்றியும் திரைதிரைபாய் மாறுபட்டும் உறழ வரும் அடிகள் பத்தும், நிரையீற்று வஞ்சிச்சீர் நின்று மேற்குறித்த ஐவகைச் சீர்களுடன் கூடுங்கால் திரை நிரையாய் ஒன்றியும் நேர் நேர்பாய் ஒன்றாமலும் வரும் அடிகள் பத்தும் உரியசைபீற்றுவஞ்சியடி அடிகள் பத்தும், அசைச் சீரடியும் மேற்குறித்த ஐவகைச் சீர்களுடன் ஒன்றியும் ஒன்றாமலும் வரும் அடிகள் பத்தும் ஆக அடிகள் எழுபது வகைப்படும் எனவும், அசைச்சீர், இயற்சீர், ஆசிரியவுரிச்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர் என்னும் ஐந்தினை யும் முதற்சீர்களாக நிறுத்தி அவற்றுடன் இரண்டாஞ்சீராக ஐந்துசீர்களையும் வருவித்துப் பெருக்க இருபத்தைந்தும், மூன்றாஞ்சீர்களாக மேற்குறித்த ஐந்து சீர்களையும் வருவித்துப் பெருக்க நூற்றிருபத்தைந்தும், அவற்றுடன் நான்காஞ் சீர்களாக முற்குறித்த ஐந்து சீர்களையும் வருவித்துப் பெருக்க அறுநூற்றிருபத் தைந்தும் ஆகவிரிதலின் அடிகள் அறுநூற்றிருபத்தைந்தாம் என்பதும் இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் தரும் விளக்கமாகும்.