பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ உக. ரு 1நுந்தை நனிமுழவு கோருருமு காருருமு எனவும் இவை ஏழெழுத் தடிமுதற் பதினான் கெழுத்தளவும் நுந்தை வந்தவாறு. வண்டென்பதற்கும் இஃதொக்கும். 1ஞாயிறு வேண்டு வரகு வரகு-எனவும், ஞாயிறு கோருருமு மோவருவாய் காருருமு-எனவும் இவை ஏழெழுத்தடியும் பதினான்கெழுத்தடியுமாயினவாறு. போதுபூ 2போரேறு என்பன வற்றிற்கும் இஃதொக்கும். தேமா 2வரகு வரகு வரகு-எனவும், தேமா 2நனிமுழவு கோருருமு பாதிரி எனவும் எட்டெழுத்தடி முதலாகப் பதினான் கெழுத்தடியளவும் உயர்ந்து தேடா ஏழடிபெற்றது. ஒழிந்த பத்துச்சீர்க்கும் இஃதொக்கும். புளிமா 2வரகு வேரகு வரகு-எனவும், புளிமா 2புலி வருவாய் கோருருமு தேமா-எனவும் இவை ஒன்பதெழுத்தடி முதலாகப் பதினான்கெழுத்தடியளவும் உயர்ந்து ஆறடிபெற்றது; ஒழிந்த எட்டுச்சீர்க்கும் இஃதொக்கும். 1நனிமுழவு 2வண்டு வேரகு வரகு-எனவும், தனிமுழவு கோருருமு போதிரி தேமா-எனவும் இவை பத்தெழுத்தடி முதற் பதினான்கெழுத்தளவும் ஏறி ஐயெழுத்து நனிமுழவு ஐந்தடி பெற்றது; புலிவருவாய்க்கும் இஃதொக்கும். இவற்றுக்கெல்லாம் பதினான்கெழுத்தின் ஏறியக்காற் செப்பலோசை திரிபுடையவென்பது வல்லார்வாய்க் கேட்டு உணர்க. என்னை ? "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன. ருணர்த்தலும் வல்லோ ராறே (தொல்.செய்.11) என்றமையின், “அடியி னுட்ட மறிவருங் குரைத்தே' எனப் பிறருஞ் சொல்லுப. இனிக் கலியடிக்குரியசீர் இருபத்துநான்கும் ஒரோவொன்று ஐந்தடியுறழ அதன் அடித்தொகை நூற்றிருபதாம். "அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி யிருநெடி லடியுங் கலியிற் குரிய" (தொல், செய், 59)