பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ @_子°五_ வடிக ளொன்பது மீரே ழளவு முயர்ந்து பெறுந்தொகை யுணரக் கூறின் நான்குதலை யிட்ட வையொரு பஃதாம்’ ருச கணவிரி வண்டு வரகு வரகு எனவும் கணவிரி காருருமு காருருமு தேமா எனவும் கணவிரியடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். காருருமு. வண்டு வரகு வரகு எனவும் காருருமு காருருமு காருருமு ஞாயிறு எனவும் ஒட்டுக. புளிமா வரகு வரகு வரகு எனவும் புளிமா புலிவருவாய் காருருமு தேமா எனவும் ஒட்டுக. ஒழிந்தவற்றிற்கும் ஏற்குமாறறிந் தொட்டுக. “நரையுருமு புலிவருவாய் முதலா மடிக ளிரைந்து தொட்டே யீரே ழளவு முயர்ந்து பெறுந்தொகை யிரைந் தாகும்': ம் நரையுருமு வண்டு வரகு வரகு எனவும் நரையுருமு காருருமு பாதிரி தேமா எனவும் நரையுருமு அடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். புலி வருவாங்க்கும் இஃதொக்கும். பதினான்கெழுத்தினேறியக்காற் செப்பலோசை திரிபுடைய கட்டளைக்கென்பது இசையொடுசேர்த்தியுணர்க. "வெள்ளைக் குறழ்ந்த வடித்தொகை கூறி னொன்று முடிவிட்டவெண் னொருபது நூறாம்”3 والتي بنيتي 6YF 1. கணவிரி, பெருவேனு, காருருமு, புலிசெல்வாய், மழகளிறு, உருமுத்தி, மாவருவாய், புளிமா, வரகுத்தி - எனவரும் ஒன்பதும் முதற்சீராய் நின்று பின்வரும் சீர்களோடு புணர்ந்து அடியாகுமிடத்து ஒன்பதெழுத்து முதல் பதினான்கெழுத்து வரையுயர்ந்து ஒவ்வொன்றும் ஆறடிகளைப் பெறுதலின் 9X6=54 அடிகளாகும். நான்கு தலையிட்ட ஐயொருபது - ஐம்பத்துநான்கு. 2. நரையுருமு, புலிவருவாய் - என்னும் இரண்டும் முதற்சீராய் நின்று பின்வரும் சீர்களோடு புணர்ந்து அடியாகுமிடத்துப் பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்துவரை யுயர்ந்து ஒவ்வொன்றும் ஐந்தடிகளைப் பெறுதலின் 2x5 =10 அடிகளாகும். 3. ஒன்று முடிவுஇட்ட எண்ணொருபது நூறு - என்றது நூற்றெண்பத் தொன்று என்னுந்தொகையினை. எண்ணொருபது என்பது எண்பது என்னும் பொருளில் ஆளப்பெற்றது. எண்பதும் நூறும் என எண்ணும்மை விரித்துக் கொள்க. எனவே வெண்பாவுக்குரிய கட்டளையடி 181 என்பது புலனாம்.