பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பாசக 盈、 தொல்காப்பியனார் காலத்தில் இவ்வாறு எழுத்தெண்னி வகுக்கப்பெறும் கட்டளையடிகளும் எழுத்தெண்ணாது வகுக்கப்பெறும் சீர்வகையடிகளும் ஆகிய இருதிறமும் அமைய நல்லிசைப் புலவர்கள் செய்யுள் செய்தனர் எனவும் அவர்க்குப்பின் கடைச். சங்க காலத்திற் கட்டளையடிகளாற் செய்யுள் செய்யும் பழக்கம் அருகி மறையலாயிற்று எனவும் கருதவேண்டியுள்ளது: “இந்நூல் செய்த காலத்தில் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள் செய்தார் என்பது இச்சூத்திரங்களாற் பெறுதும். பின்பு கடைச்சங்கத். தார்க்கு அஃது அரிதாகலிற் ர்ேவகையடி பயிலச் செய்யுள் செய்தார் என்றுனர்க' எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். ச.கூ. ஆங்கனம் விரிப்பின் அளவிறந் தனவுே பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை இாைம்பூரணம் : என் - எ னின். அடி விரியுமாறு உணர்த்துதல் நுதலிற் று. (இ - ள்.) ஈண்டுறழ்ந்த முறையானே அஞ்சடி முதலாக மேன்மேலும் உறழ வரம்பிலவாம் என்றவாறு. அஃதாவது அறுநூற்றிருபத்தைந்தினோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ மூவாயிரத்தொரு நூற் றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஆறாவது இவ்வகை யைந்துதீரை:ம் உறழப் பதினையாயிரத்து அ நற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஏழாவது வரும்ச் ரைந்தினையும் உறழ எழுபத் ண்ேணாயிரத் தொரு நூற்றிருபத்தைந்து விகற்பமாம். இவ் வகையினா னுறழ வரம்பிலவாய் விரியும். அன்றியும், இச்சொல்லப்பட்ட அடியினை அசையானும் எழுத்தானும் விரிக்க வரம் பில வாம்.1 (ச கூ) 1. நாற்சீரடியாகிய அளவடிகளைப் பெருக்கிக்கண்டாற்போன்று அளவடியின் மிக்கு ஐஞ்சீரடிமுதலாகவரும் ஏனைய அடிகளையும் சீராலும் அசையாலும் பெருக்கிக் காணின் அவை வரம்பிலவாய் விரியும் என்பார் ஆங்ங்னம் விரிப்பின் அளவிறந் தனவே என்றார். ஈண்டுப் பாங்குற உணர்தல் என்றது, அசையுஞ்சீரும் நோக்கி அடிகளைப் பகுதிப்படப் பெருக்கிக்காணுதல்.