பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருஉ இ.தி கி. வாகி வருதலேயன்றிப் பல வடிகளோடும் விரவிவருதல் எனப் பொருள் கொண்டார் இளம்பூரணர். தளைவிரவிவருதல்' எனப் பொருளுரைத்தார் பேராசிரியர். தளை வழுவிவருதல்’ என்பர் நச்சினார்க்கினியர். தளைமயங்காதனவே தளைவகையடியாகும் எனவும் தளைவிர விவரும் அடிக்கும் பதினேழ் நிலம் கொள்ளப்படும் எனவும் 'விராஅய்வரினும் என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மையாதலின் இவ்வாறு கட்டளையடியோடு சீர்வகையடிகள் ஆசிரியத்தில் விரவி வந்தாலும் அளவடிகளாகிய அவை கட்டளையாகாமற் சீர்வகையடியாய் ஐந்தெழுத்துமுதல் இருபதெழுத்தளவும் வரும் எனவும் எனவே இங்ஙனம் கலந்து, வரும் சீர்வகையடிகள் விலக்கத்தக்கன அல்ல எனவும் இச்சூத்திரத்திற்கு விளக்கம் தருவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், ரு.உ. தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இன்சீர் வகையின் ஐந்தடிக்கும் உரிய தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா.1 இளம்பூரணம் : என்-எனின். இத்துணையும் அடியும் அடிக்குரிய எழுத்துக்க ளும் ஒதினார்: இனி அவ்வடிக்கண் ஒசை வேறுபாடுந் தளை யிலக்கணமு முணர்த்துவார் அத் தளைக்கண் வருவதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) தத்தஞ் சீர்நிலை வகையானுந் தளைநிலை வகை யானும் இனிய ஓசைவேறுபாட்டினையுடைய ஐந்தடிக்கு முரிய தன் சீருள்வழித் தளைவேறுபாடு கோடல் வேண்டா என்றவாறு. எனவே, சீர்தானே ஓசையைத் தரும் என்றவாறாம் 2 உரிய தன்சீர் என்றது ஐந்தடியினும் ஏற்றவழி நிலைபெறுந் தன் சீரென்றுகொள்க அஃதாவது குறளடியாகிய ஐந்தெழுத்தி 1. இதன் முதலிரண்டடி ஒருகுத்திரமாகவும் மூன்றாமடி ஒரு சூத்திர மாகவும் கொண்டனர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 2. குறளடி முதலாக எண்ணப்பட்ட ஐந்தடிகளையும் சீர் வகை பற்றியும் தளைவகை பற்றியும் பகுத்துரைத்தல் மரபென்பதும், அவ்வப் பாக்களுக்குரிய சீர்கள் வருமிடத்து அச்சீர்களே அந்தப்பாவின் ஒசையைத் தருமென்பதும், அவ்விடத்துத் தளைவேறுபாடு கொள்ளவேண்டிய இன்றியமையாமையில்லை யென்பதும் இச்சூத்திரத்தாம் புலனாம்.