பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க ú互_ மெய்ப்பாடும் (516) இவற்றினெல்லாம் ஒழிந்துநின்ற எச்சமும் (518) அவ்வெச்சத்தோடுங் கூட்டி யுணரப்படும் முன்னமும் (519) அம்முறைமையான் அதன்பின் வைத்தான். அவற்றிற் கெல்லாம் பொதுவாகிய பொருளை (520) அதன்பின் வைத் தான். அப்பொருட் பி ற ழ் ச் சி ைய ஒருதுறைப்படுக்குந் துறையை அதன்பின் (521) வைத்தான். மேல் (523) எச்சமும் மாட்டு மின்றியும் வரூஉமென்பவாகலான் மாட்டினைத் துறை வகையின் பின் வைத்தான். அவற்றுள் எச்சத்தினை முன் ஒதி னான் அது செய்யுட்கனின்றி வருஞ் சிறுபான்மையாதலா னென்பது; வண்ணம் பாவினது பகுதியுறுப்பாதலான் அதனை அவற்றுப் பின் (547) வைத்தான், வனப்பினை (525) எல்லா வற்றுக்கும் பின் (547) வைத்தான், அவற்றை ஒன்றொன்றாக நோக்குங்கால் அவ்வெட்டுமின்றியுஞ் செய்யுள் செய்பவாகலி னென்பது. மற்றிவ்வுறுப்பினையெல்லாம் ஆசிரியன் குறியென் றுமோ உலகு குறியென்றுமோ வெனின், அவ்விருதிறத்தானும் ஏற்பனவறிந்து கொள்ளப்படுமென்றொழிக. இவற்றை உயி ருடையதனுறுப்புப் போலக் கொளின் உயிர் வேறு கூறல்வேண் டுவதாம் ; அவ்வாறு கூறாமையிற் கலவையுறுப்புப்போலக் கொள்க. நச்சினார்க் திணியம் இவ்வோத்து செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையிற் செய்யுளியல் என்னும் பெயர்த்து: எனவே இவ்வோத்துநுதலியது செய்யுளிலக்கணமாயிற்று. பாயிரத்துள் 'வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்வல்” என்றமையான் இதற்கு முன்னர்க்கூறிய அதிகாரங்களிலும் இவ்வதிகாரத்தும் எல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவனகறி, அவ்விரண்டும்பற்றிச் செய்யுள் நிகழுமாதலால் அச்செய்யுட்குரிய இலக்கணத்தையெல்லாம் இவ்வோத்தினுட் டொகுத்துக் கூறுகின்றார் என்றுணர்க. இங்ங்னங்கூறவே, முற்கூறிய ஒத்துக்களோடு இயைபுடைத்தாயிற்று.