பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருசு உகூரு (இ-ள்) அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரியன; (அவை உரியவாதல்) தளைவகை ஒன்றாத் தன்மைக்கண் எ-று. 'எனவே தளைவகை ஒன்றுந்தன்மைக்கண் நெடிலடியுஞ்சில வருமென்று கொள்க' எனவும், தளைவகை ஒன்றாமையாவது, நிலைமொழியும் வருமொழியுமாகிய இயற்சீர் நேராய் ஒன்றுவதும் நிரையாய் ஒன்றுவதும் அன்றி மாறுபட வருவது; அவ்வழி நிரையிற்றியற்சீர் நிற்ப நேர்வரினும், நேரீற்றியற்சீர் நிற்ப நிரைவரினும் இயற்சீர் வெண்டளையாம் எனவும், ஒன்றுந் தன்மையாவது வெண்சீர்நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம் எனவும் இவ்விரண்டும் வெண்பாவிற்குத் தளையாம் எனவும், ஒன்றாத் தன்மைய தாகிய இயற்சீர்வெண்டளை வருமிடத்து அளவடியும் சிந்தடியும் வெண்பாவுக்கு உரிய என இச்சூத்திரத்தாற் கூறவே, ஒன்றுந் தன்மையதாகிய வெண்சீர் வெண்டளை வருமிடத்து நெடிலடியும் சிலவரும் என்பது பெறப்படும் எனவும் இச்சூத்திரப் பொருளை விளக்குவர் இளம்பூரணர். இனி, தளைவகை ஒன்றுந் தன்மையாவது, வெண்பாவும் வெண்டா நடைத்தாகிய கலிப்பாவும் அடிவகையால் ஒத்தன. வாதலின் அடியொன்றே வெண்பாவுக்குரிய செப்பலோசைக்கும் கலிப்பாவுக்குரிய துள்ளலோசைக்கும் பொதுவாய் மயங்கி வருதல் எனவும், ஒன்றாத்தன்மையாவது, அங்ங்னம் இரு பாவுக்கும் பொதுவாய் மயங்கி வாராது கலியின் வேறுபட்டு வெண்பா அடியேயாகத் தனித்து வருதல் எனவும், கலியோசை மயங்கி வரும் வெண்பா அடிகளும் உள, அவை நெடிலடி மூன்றானும் வருமெனவும் கூறுவர் பேராசிரியர். ருக அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி இருநெடில் அடியுங் கலியிற் குரிய. இளம்பூரணம் : என்-எனின். இது கலிப்பாவிற்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக1 நெடிலடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின்காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாம் என்றவாறு. і загаласавда, பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்து முடியவரும் அடி அவ்வளவடிகள் ஐந்தனுள் பன்னிரண்டெழுத்தாகிய நடுப்பகுதியைக்