பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருக so. of 51" 'மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது (யா. வி. 30) என்னும் ஆசிரியவடியினைக் கலிப்பா மயங்கிற்று என்பாரும் உளர். அது துள்ளச்செல்லுங்கால் அளபெடுக்கவேண்டுமெனக் கூறிமறுக்க.1 (கrஉ) நச்சினார்க்கினியம் : இது வெள்ளடி ஆசிரியத்துள் வருமாறு கூறுகின்றது. (இ ள்) இயற்சீர் வெள்ளடி எது இயற்சீர் வெண்டளை யாசிரியச் சீரான்வரும் வெள்ள்டி, ஆசிரிய..........பெறுமே எது ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபிலே நிற்கப்பெறும் எ-று. உம்மை எதிர்மறை. ஆசிரியவடியோடு மயங்கி அதற்குரிமை பூண்டு நிற்குமென்பார் நிலைக்குரிமரபினென்றார். இதனானே மயங்காமல் இயற்சீர் வெள்ளடி முழுதும் வரவும் பெறுமென்றுங் கொள்வாகுமுளர்.3 உ-ம். எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் (குறுந்தொகை-கஉ) என இயற்சீர் வெள்ளடி பின்வருகின்ற ஆசிரியவடியோடு மயங்கி வந்தது. இனி 'கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்த புகர்முக யானை நுதன்மீ தழுத்திய செங்கோற் கடுங்கணை போலு மெனா அது நெஞ்சங் கவர்ந்தோ ணிரையிதழ்க் கண்ணே இது வெள்ளடி முழுதும் வந்ததென்று பேராசிரியர் காட்டினார். இதனை அகவலோசை பிறக்குமென்று கொள்ளின் இயற்சீர் 1. மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது' என்பது நேர்நிரைபு நிரைநேர்பு நிரைநிரைபு நேர்நேர்பு' என ஆசிரியவுரிச் சீரால் வந்த அடியாதலின் ஆசிரிய அடியாயிற்று. இதனைத் துள்ளலோசையினை. யுடைய கலியடியாக்க வேண்டுமாயின், 'மாஅவழங்கு பெருங்காஅட்டு மழகளிறு காஅணாது” என அளபெடை சேர்த்துக்கூறுதல் வேண்டும் என்பது பேராசிரியர் கருத்தாகும். 2. நிலைக்குரிமரபின் நிற்றலாவது ஆசிரியவடியொடு கலந்து அப் பாவிற்கு உரிமைபூண்டு நிற்றல், நிற்கவும்' என்புழி உம்மை எதிர்மறை எனக் குறித்தலால் நில்லாமையே பெரும்பான்மை என்றாராயிற்று. 3. இங்ங்னங் கொள்பவர் பேராசிரியர்.