பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுக. 鑫-盡-古露 வரையாரென்றான். அவற்றினுஞ் சிறுவரவிற்றாகவின் இதனை? உம்மையாற்கொண்டான், முற்றும்மையாகாதோ வெனின் அதுவும் எச்சப்படுதலின் அமையுமென்பது. அல்லது உம் முத லடியிரண்டே அன்மையின் முற்றாகாதென்பது.8 (காசு) நச்சினார் த் திணியம்: இஃது எய்தாத தெய்துவித்தது; எழுசீரடியே யன்றி அறு சீரடியும் ஐஞ்சீரடியும் முடுகு மென்றலின். (இ-ள் ) எழுசீரடிக்கும் ஐஞ்சீரடிக்கு முன்னின்ற அறுசீரடிக்கும் ஐஞ்சீரடிக்கும் இம்முடுகியல் நீக்கார்- எ. று : முதலீரடிக்கும் என்ற வும்மை எச்சவும்மை யாதலின் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகுமென்க. உதாரணம் மேலைச்சூத்திரத்துட் காட்டுதும். ஆய்வுரை : இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) எழுசீரடிக்கு முன்னர்ச் சொல்லப்பட்ட அறுசீரடிக்கும் ஐஞ்சீரடிக்கும் முடுகியல் வருதலை விலக்கார் ஆசிரியர் எ-று. ‘முதலீரடிக்கும்’ என்ற உம்மையால், ஐஞ்சீரடி அறுசீரடி என்னும் இரண்டுமன்றி நாற்சீரடியாகிய அளவடியும் சிறுபான்மை முடுகியலாய் வரும் எனக்கொள்வர் பேராசிரியர். உதாரணம் பேராசிரியர் உரையிற் காண்க. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் التي ته وايي மூவகை படியு முன்னுதல் இலவே. இளம்பூரணம் : என்-எனின். எய்தியது விலக்குதல் நுதலிற்று. 1. அவற்றினும்-ஐஞ்சீரடி அறுசீரடிகளைக் காட்டிலும். சிறுவரவிற்றாகவின்சிறுபான்மையதாய் வருதலின். 2 இதனை-நாற்சீரடியை 3 எழுசீரடியின் முதற். கண் உள்ள அடிகள் இரண்டு என்னுந் தொகைக்குள் அடங்காமையின் 'முதலீரடிக்கும்’ என்புழி உம்மை முற்றும்மையாகாதென்பதாம். 4. எழுசீரடிக்கும் முன்னின்ற அறுசீரடிக்கும் ஐஞ்சீரடிக்கும் இம் முடுகியல் நீக்கார் - எ-று' என இவ்வுரைப்பகுதியினைத் திருத்திக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.