பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. அ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நேரிழை மகளி ருணங்குனாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கணங்குழ்ை’ (பட்டினப்பாலை) என ஆசிரியவடியும் வெள்ளடியும் இடைவந்தன. ஆய்வுரை : இது, வஞ்சிப்பாவின் ஈறு உணர்த்துகின்றது. (இ-ள்) வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இறுதியின் இயல்பினதாய் முடியும் எ-று. ஈண்டுத் தூக்கு என்பது, துணித்து முடிப்பதாகிய இறுதி என்னும் பொருளில் ஆளப்பெற்றது. வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இயல்பினதாய் முடியும். எனவே வஞ்சிப்பாவின் ஈற்றயலடி ஆசிரியப்பாவின் ஈற்றயலடி போன்று முச்சீரான் வருதலும் நாற்சீரால் வருதலும் கொள்ளப்படும். உதாரணம் முன்னைய உரைகளிற் காண்க. சுக வெண்பா ஈற்றடி முச்சீர்த் தாகும் அசைச்சீர்த் தாகும்? அவ்வழி யான. இளம்பூரணம் : என் - எனின். வெண்பாவிற்கு இறுதியடியும் இறுதிச்சீரும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வெண்பாவினிற்றடி மூன்று சீரையுடைத்தாகும்; அதன்கண் இறுதிச்சீர் அசைச்சீரான்வரும் என்றவாறு. உதாரணம் முன்னர்க் காட்டுதும் (காக) G L J m fif want : இது வெண்பாவிற்கு ஈறு உணர்த்துகின்றது. ஆசிரியத்துக்கோவெனின், தனக்கோ திய அளவடியானே லின் வேறுபாடு த தய அ LT- முத ԱՈl 1. இதனை இரண்டு சூத்திரங்களாகப் பகுத்துரைவரைவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், வெண்பாட்டிற்றடி என்பதும், அவ்வயினான” என்பதும் அவர்கள் கொண்ட பாடம். 2. அசைச்சீர்த்தாகும் - அசைச்சீரையுடையதாகும், ஆகும் என்னும் பயனிலைக்கு வெண்பாவீற்றடி' என்பதனை எழுவாயாக வருவித்துரைக்க. "அசைச்சீராகும்’ என்பது பாடமாயின் அசைச்சீர் அவ்வயினான ஆகும் என அசைச்சீர் என்பதனையே எழுவாயாகக் கொள்க.