பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எ ல் ஆய்வுரை : இது, வெண்பாவிற்கு ஈறு உணர்த்துகின்றது. (இ-ள்) வெண்பாவின் இறுதியடி மூன்று சீரையுடைய தாகும். அவ்விடத்து (நேர், நிரை, நேர்பு, திரைபு, என்னும்) அசைகளில் ஒன்றே சீராய் நின்று முடியும் எ-று. இச்சூத்திரத்தின் முதலடியினை ஒரு சூத்திரமாகவும் இரண்டாமடியினை மற்றொரு சூத்திரமாகவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறுவர். இளம்பூரணர் ஒரு சூத்திரமாகக் கொண்டவாறே இங்கும் கொள்ளப்பெற்றது. எம் நேரிற் றியற்சீர் திரையும் நிரையும் சீரேற் றிநூஉம் இயற்கைய என்ப. இாைம்பூரணம் : என் - எனின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் துதலிற் று. (இ - ள்.) வெண்பாவி னிறுதிச்சீரின் அயற்சீர் நேரீற்றியற். சீராயின் நிரையசையும் திரைபு அசையுஞ் சீராந்தன்மையைப் பெற்று முடியும் இயற்கையை புடைய என்றவாறு 'கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” (குறள். கூர் "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ (குறள். எ) என வரும், (67'Ο) இது, மேற் கூறப்பட்ட இயற்சீர் நான்கும் வருங்கால் இன்னுழி நின்று இன்னவாறு கொள்ளப்படுமென்ப துணர்த்து தல் நுதலிற்று 1. நேரீற்றியற்சீர் என்பன தேமா, புளிமா என்னும் வாய்பாட்டு இயற் சீர்கள், திரையும் நிரையும் சீர் ஏற்று இறு உம்' என்றதனால், இந் நேரீற்றியற். சீர்கள் இறுதியடியின் ஈற்றயலில் நிற்பன என்பது புலனாம். ஏற்றல் - வருஞ்சிராக ஏற்றுப்பொருந்துதல். இறுஉதல் - முடிதல். எனவே மாச்சீர்முன் நிரையும் திரைபும் ஆகிய அசைச்சீர்களுள் ஒன்றுவரின் இயற்சீர் வெண்டளையெனப்படும் என்பதாம்.