பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எம் க. கு எனவும் இவற்றினுட் கொள்ளா எனவுங் கோதை" எனவும் நின்ற நேரீற்றியற்சீர் முன்னர் முலையெனவுங் கனிறெனவும் நிரையும் நிரையுஞ் சீரேற்றவாறும் வெண்பாட்டீற்றடி முச்சீர்த் தாயவாறும் ஆண்டு அசைச்சீர் வந்தவாறுங் கண்டுகொள்க. என்றார்க்கு, முச்சீரடியின் முதற்சீர்க்குத் தளை கூறாரோ வெனின், ஆண்டுத் தளைவகையின்றியும் வருதவின், அதனை வரைந்து கூறாரென்பது; என்னை? கோட்டுமண் கொள்ளா முலை' எனவுங் காய்சினவேற் கோதை களிறு' எனவுந் தளை வகையான் வந்தன 'உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅ அய் வாழியென் நெஞ்சு’ (குறள். 120) எனவும், 'கலாஅற் கிளிகடியுங் கானக நாட விலாஅர்க் கில்வை தமர்” (நாலடி, 298) எனவும் தளை வகையின்றி வந்தன. (எச) நச்சினார்க்கினியம்: இஃது அவ்வசைச்சீர் நான்கனுள் நிரையும் நிரையும் இன்னுழி நின்று இன்னவாறு தட்கும் என்கின்றது (இ-ள் ) நிரையும் திரைபும் நேரீற்றியற்சீர்ப்பின்னே தளை. கொண்டிறும் இயல்பின. எ-ஆ. இயற்சீர்ப் பாற்படுத் தியற்றுக’ (செய்-உஅ} என்றவைதாம் வருஞ்சீரோடு தட்குமாறுகூறி, ஈண்டு அவை முன்னின்ற சீரோடு தட்குமாறு கூறுகின்றது. 1. செறாஅய் வாழியென் நெஞ்சு எனவும் இலாஅர்க் கில்லை தமர்' எனவும் வரும் அடிமுதற் சீரின்கண் ஒரளபே கொண்டு, முச்சீரடியின் முதற்சீர் தளைவகை யின்றி வந்தன என்றார் பேராசிரியர். வெண்பா தளையிழையாமல் வருதல் வேண்டுமாதலின் செறாஅ.அய் வாழியென் நெஞ்சு' எனவும் இலாஅஅர்க்கில்லை தமர் எனவும் ஈரளபு கொள்ளுவர் நச்சினார்க்கினியர் முதலிய ஏனைய உரையாசிரியர்கள். இங்ங்னம் வெண்பாவில் வெண்டளை பிழையாது கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். 2. இயற்சீர்ப் பாற்படுத் தியற்றுக’ (செய்-உஅ என்ற நூற்பா உரியசைச்சீர் முன்னர் நின்று பின்வருஞ்சீரோடு தளைகொள்ளுமாறு கூறியது. நேரீற்றியற்சீர் எனவரும் இச்சூத்திரம் அசைச்சீர் இறுதிக்கண் நின்று முன்னின்ற சீருடன் தளை கொள்ளுமாறு: கூறியது என்பதாம் .