பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என 飆.鰲"蘿。 கழங்கிட்டுரைப்பார் அங்ஙனமே வழக்கினுள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பாவெனப்படுமென்றவாறு. (அகழ் இது நிறுத்த முறையானே தாக்குணர்த்துகின்றது: நிறுக்கப்படும் பொன் வெள்ளிமுதலிய பொருள்களைப் பெற்றுழியன்றிக் கழஞ்சு, தொடி, துலாம் எனத் துலைக்கோலாற் றுக்கி யனாக்கு மாறில்லை; அதுபோல அடிவரையறை புடைபவாய்ப் பரந்த பாவினை யடிகளாற் றுணித்துத் தூக்கி ஒசைவேறுபாடுணர்த்து தலிற் றுக்கு எல்லாப் பாவிற்கும் பொதுவாயிற்து. (இ-ள்.) வழக்கினுள் அகவல் என்று வழங்கப்படும் ஓசையை ஆசிரியத்திற்குரிய என்ப. (எ.து.): அகவிக் கூறலின் அகவலாயிற்று. அஃதாவது கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக்கூறாது தாங் கருதியவாறெல்லாம் வரையாது கூறுவது. அதனை வழக். கினுள் அழைத்தலென்ப அங்கனம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்தவோசை அகவலாம். அவை களம்பாடு பொருநர் கண்ணும், கட்டுங் கழங்கும் இட்டுரைப்பார்கண்ணும், தம்மின் உறழ்ந்துரைப்பார் கண்ணும், பூசலிசைப்பார்கண்ணும் கேட்கப்படும். வழக்கின்கணுள்ளதாய் அங்ங்ணம் அழைத்துக் கூறும் ஒசை ஆசிரியப்பா. (எ-று.) ஆய்வுரை : இது, துரக்கு என்னும் உறுப்பு உணர்த்தத் தொடங்கி அகவற்பாவிற்குரிய ஓசையுணர்த்துகின்றது. (இ-ஸ்) அகவல் என்று வழங்கப்படும் ஓசை ஆசிரியப்பாவிற்கு உரியதாகும் (எ று.) முன் பக்கத் தொடர்ச்சி பூசவிசைப்போர் - பகைகொண்டு பேசுவோர், .* இத் - #ါ႕ wr s ::ుగ - துகைத் வாதி பலதிறத்தினராக இங்குக குறிக்கப்பட்ட எல்லோருடைய 5. 驳蕊多 தொழிலாரவாரங்களிலும் அழைத்துக்கூறும் உரையாடல்களிலும் அகவலோசை யின் அமைப்பு செவிவாயிலாகப் புலனாகும் என்பதாம். 1. அகவல் என்பது' - என்பதற்கு ‘அகவல் என வழங்கப்படுவது' எனப் பொருள் கொண்டமையால் வழக்கினுள் என்னும் சொல்லும் என்!” என்னும் முற்றுவினையும் உரையின்கண் வருவித்துரைக்கப்பெற்றன. بر با ۹