பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா நட 'மொழிப்படுத் திசைப்பினும்’ (20) என்பதன்கட் கூறியவாற்றானுணர்க. குறில் நெடில் என எழுத்தாக ஒதிற்றேனும் 'நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி' (தொல். மொழி. 10) என்றதனால் நெடில் சொல்லாந்தன்மையும் 'குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே' (தொல். மொழி. 11) என்றதனாற் குறிலும் சிறுபான்மை சொல்லாந்தன்மையும் பெறுதும்; அன்றியும் ஒற்றுக் கூறினமையானும் பெறுதும். "உள் ளார் தோ ழி என நேரசை நான்கும் வரி வரால் கலா வலின்’ என நிரையசை நான்கும் வந்தன. ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே எழுத்துக்களாலாகிய அசைகளின் கூறபாடு உணர்த்துகின்றது. (இ - ள்) குறிலும் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் அவற்றைப் பொருள் பெற ஆராய்ந்து நேரசை யெனவும், குறிலினையும் குறில் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் (அவற்றைப் பொருள் பெற ஆராய்ந்து) நிரையசையெனவும் பெயர் கூறினார் ஆசிரியர். (எ - று.) 'குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்’ என ஒரு தொடராக வைத்து எண்ணப்பட்ட நான்கனுள் எண்னேகாரம் பெற்ற முதலிரண்டினையும் ஒரு தொகுதியாகவும், எண்ணிடைச்சொற் பெறாத ஏனை யிரண்டினையும் மற்றொரு தொகுதியாகவும் இருவகைப்படுத்து ஒற்றொடு வருதலையும் மெய்ப்பட நாடுதலையும் இவ்விரு தொகுதிகட்கும் பொதுவாக்கி, இவ். விரண்டிற்கும் முறையே நேர் எனவும் நிரை' எனவும் பெயர்தந்தமையின், இச்சூத்திரம் ஒரு வகைநிரல்நிறைப் பொருள்கோள் 1 . மொழிப்படுத் திசைப்பினும் (மொழிமரபு - 20) எனவரும் எழுத்ததி காரச் சூத்திரம், ஒற்றும் குற்றுகரமும் எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களோடு கூட்டி எண்ணப்பட்டு நிற்கும் என்பதும், செய்யுளியலுள் எண்ணப்படாது (அலகுபெறாது) நிற்கும் என்பதும் கூறுகின்றது என நச்சினார்க்கினியர் கருத்துரை வரைந்துள்ளமை இங்கு இயைத்து நோக்கத்தகுவதாகும்.