பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நாற்பா கூ அ ருள் ரு .೩೯್ಲಿತ್ತ பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இச்சூத்திரத் عر حسو திற்கு வெவ்வேறு பொருள் கொண்டு கூறிய விளக்கங்கள் அவரவர் உரைகளிற்கண்டு சிந்தித்துத் தெளியத்தக்கனவாகும். க.அ. தெரிந்தனர் விரிப்பின் வரம்பிவ ஆகும் ! இனாம்பூரணம் : என்- எனின். எய்தியதன்மேற் சிறப்பு விதி உணர்த்துதல் துதவிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட தொடையினை ஆராய்ந்து விரிப்பின் வரம்பிலவாகி விரியும் என்றவாறு. அவையாவன மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவற்றின்கண் இணை, கூழை, முற்று, மேற்கதுவாய். கீழ்க்கதுவாய், கடை, கடையிணை, கடைக்கூழை, இடைப்புணரென வேறுபடுத்துறழ்ந்தும், எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி அடியந்தாதி எனவும், உயிர் மோனை உயிரெதுகை நெடில்மோனை நெடிலெதுகை வருக்கமோனை வருக்கஎதுகை இனமோனை இனவெதுகை ஆசெதுகை எனவும் மூன்றாமெழுத்தொன்றெதுகை இடையிட்டெதுகை எனவும், இவ்வாறு வருவனவற்றை மேற்கூறிய வகையினான் எழுத்து வேறுபாட்டினா னுறழவும், நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலாகிய சித்திரப்பாக்களானும் உறழவும், வரம்பிலவாகி விரியும். அவற்றுட் சில வருமாறு: இணையாவது முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. கூழையாவது முந்துற்ற மூன்று சீரினும் வந்து இறுதிச்சீரின் வாராதது. 'அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி" (யாப். வி. ப. க.க.0) இஃது இணைமோனை. 'பொன்னின் அன்ன பொறிகனங் கேந்தி' (யாப் வி. ப. கங் ச) இஃது இணையெதுகை. 'சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு”.(யாப், வி. ப கச எ) இஃது இணைமுரண். 1. பல்கும்’ என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபா டம்.