பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு.உ.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் துகில்பொதி பவள மேய்க்கும் அகில்படு கள்ளியங் காடிறந் தோரே' இஃது ஆசிரியப்பாவுறுப்பாகிய செய்யுள். வசையில்புகழ் வயங்குவெண்மீன்' இது வஞ்சியுறுப்பாகிய செய்யுள். 'வாரிய பெண்ணை வளர்குரும்பை வாய்த்தனபோல் ஏரிய வாயினு மென்செய்வ - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங். கோட்டுமண் கொள்ளா முலை’ இது வெண்பாவுறுப்பாக வந்த செய்யுள். அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்’ இது கலியுறுப்பாக வந்த செய்யுள். இவற்றின் பாவைத் தூக்கி படி வரையறுத்தவாறு காண்க. ஆசிரியப்பா வெண்பாவென மூன்றுக்கிற் கூறியவாறன்றி ஆசிரியம் வஞ்சி யென்று கூறினார், வழக்கிற்குஞ் செய்யுட்குமுரிய வாசிரியமும் வெண்பாவும் போலச் செய்யுட்குரிய கலியும். வஞ்சியுஞ் சிறப்பிலவோ வென்று ஐயுறாமைக்கும் அவற்றிற் கவ்வையுறவுடைய வென்றற்கு மென்க. ஆய்வுரை : இது, நிறுத்த முறையானே ‘பா’ என்னும் உறுப்பு உணர்த்து கின்றது. (இ-ள்) பாவினது வகையை விரிக்குங்காலத்து ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நான்கியல்பினையுடையது என்பர் ஆசிரியர் எ-று. ‘பா’ என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமற் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இஃது இன்ன செய்யுள் என்று உணர்தற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை யென்பர் பேராசிரியர். 2 . அவற்றிற்கு அவையுற புடைய’ என் விருத்தல் போருத்தம்.