பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வரு ருக. சண் வகை யென்றதனாற் கடவுளரும், முனிவரும், பசுவும், பார்ப்பாரும், அரசரும், மழையும், நாடுமென்னும் அறுமுறை. வாழ்த்து வருதலே பெரும் பான்மைய என்பது உம், அங்கனம் வாழ்த்துங்காற் றனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலுமென இருவகையான் வரும் வாழ்த்து மென்பது உம், முன்னிலையாகவும் படர்க்கையாகவும் வரும் வாழ்த்து மென்பதுரஉங் கொள்க. உ-ம் மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பெளவ முடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே' (நற்றிணைவாழ்த்து) இது தனக்குப் பயன்பட வாழ்த்தியது. 'நீல மேனி வாலிழை பாகத் தொருவ னிருதா னிழற்கீழ் மூவகை யுலகமு முகிழ்த்தன முறையே (ஐங்குறுநூற்று வாழ்த்து) இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது. "முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை யுள்ளா ரெழிலின்னா சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு” (இன்னா நாற்பது வாழ்த்து) :வானிடு வில்லின் ... ... முடிகவென்று' (நாலடி வாழ்த்து) 'ஆறறியந் தணர்க்கு (கலித்தொகை வாழ்த்து) இவற்றின் வேறுபாடுமுணர்க. இவற்றைக் கடவுள் வாழ்த்தென்று பெயர் கூறப்படும். 'உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து (திருக்குறள் உச) இது முனிவரை வாழ்த்தியது.