பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாசு ருசக. கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ" எனவும் வரும். இனி கலிப்பாவினுள் வருங்காற். கடவுண்முன்னிலையாக வரும்; என்னை? தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே' (தொல்-செய், 138) என்றமையின். அது வாழ்த்தியல் வகை யென மேலே படங் கிற்று. வஞ்சிப்பாவிற்கும் அவ்வாறு கொள்ளப்படும். இச் சூத்திரம் பாவென்னும் உறுப்பிற்குப் பொருள்வரை யறுத்தது. மற்று நிற்புறங் காப்ப வென ஒருமைகூறிப் பொலி மின்’ எனப் பன்மைகறிய தென்னையெனின், “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப’ (ப்பொலிமின்) என்றமையிற் புதல்வரோடுங் கூட்டிப் பாட அமையுமென்றற்கு அவ்வாறு கூறினானென்பது.? (ககC}} நச்சினார்க்கினியம் : இது, நான்கு பாவிற்கு முரித்தேயன்றி வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு கூறுகின்றது. (இ-ஸ்.) வழி ... ... ... காப்ப எ-து, நீ வழிபடும் நின்குலதெய்வம் நின்னைப் புறத்தே நின்று காப்பு. பழி ... ... சிறந்து. எ-து, இல்லறத்தாற் பொலிந்த செல்வத்தோடே நீ பெறும் புதல்வரும் அவர் பெறும் புதல்வருஞ் சிறப்பெய்தி. பொலி ......... வாழ்த்தே. எ-து, எல்லீரும் நீடு வாழ்வீராமினென்று தெய்வத்தைப் புறத்தே நிறுத்தி வாழ்த்தும் வாழ்த்து, கலி ...... பெறாஅ. எ-து, கலிப்பாவுறுப்பாகவும் வஞ்சிப்பா வுறுப்பாகவும் பாடப் பெறா. என்று. 1. கலிப்பாவினுள் புறநிலை வாழ்த்து வாராது. எனவே கடவுள் முன்னிலையாக வாழ்த்தியற்பகுதி வரும் என்பதாம். அங்ானம் வருதல் வாழ்த்தியல்வகை என மேலே கூறியதனுள் அடங்கும். 2. நிற்புறங்காப்ப' என வாழ்த்துப்பெறுவோனை ஒருமையிற்கூறிப் "பொலிமின்' எனப் பன்மை கூறியது, அவனைப் புதல்வர் முதலிய சுற்றத்தாரோடுங் கூட்டி வாழ்த்துதலிற் பொருந்தும் என அறிவுறுத்தற் பொருட்டாம்.