பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருக - தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இது, குட்டத்திற்கொரு சிறப்புவிதி. (இ-ன்.) குட்டம் எருத்தடியின்கண்ணும் வரும் (எ-று). மேல் ஆராய்ச்சிப்பட்ட குட்டம் இடைவருதலன்றி ஒரு பாட்டின் ஈற்றயலடிக்கண்ணே வந்தொழிதலும் உண்டன்றே? அதுவும் பாவிற்கேற்பக் குறைக்கப்படு மென்பான், "குட்டம் எருத்தடி புடைத்து மாகும்” என்றான்; குறைத்தற்குக் கூறினானல்வ னென்பது இதனை இவ்வாறு கூறவே மேற்கூறிய குட்டம் ஒத்தாழிசைக்கட்போல இடையிடை வருமென்பது பெற்றாம். "உடைதிரைப் பிதிர்விற் பொங்கி முன் கடல்போற் றோன்றல காடிறந் தோரே (அகம்-2) என, ஈற்றயலடி முச்சீரான் வந்தது. பிறவும் அன்ன. (ளருக.) தச்சினார்க்கிணிையம் : இது முற்கூறிய குட்டம் தரவுக்கும் உரித்தென்கின்றது. (இன்.) தரவினது ஈற்றடி குறைந்துவருதலை யுடைத் தாம்." எறு. எருத்து என்றது தரவை: அஃது 'எருத்தே கொச்சகம்’ (கசகr) என்பதனானுணர்க. "மெல்லினர்க் கொன்றையும்” (முல்லைக்கலி - க.) "மலிதிரையூர்ந்துதன்' (முல்லைக்கலி - ச) எனவும் வரும். ஆய்வுரை : இது, குட்டத்திற்கு ஒர் சிறப்புவிதி கூறுகின்றது. AMMMCCCSAASAASAASAA AAAA SCCCMSASA SAMMS SSAAAS .ே எடுத்தடி-ஈற்றயலடி 3. குட்டம் ஈற்றயலடிக்கண்வ லுமுடைத்து என ஈண்டுக்கூறவே குதி.இது தது: - முற். ந்தித் கூறியது ஒத்தாழிசைக் கலிக்கட்போல இடையிடை வருதல் என்பது

ெஜப்.:

.ே எருத்து அடி சூட்டம் உடைத்துமாகும் என இயைத்துப் பொருள் கொள்ளப்பட்டது. ‘எருத்து' என்பது தரவினைக் குறித்த பெயரெனவும் அடி' என்றது. இங்குத் தரவின் இறுதியடியைக் குறித்ததெனவும் 'குட்டம்" என்பது குறைதல் எனவும் பொருள் கொண்டார் தச்சினார்க்கினியர்.