பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ம்ள ருக கூ 'அறவோ ருள்ளா ரருமறை காப்ப' வென்னும் பரிபாடலுள், 'செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறு முறையானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு” என வெள்ளைச் சுரிதகத்தா னிற்றது. (உகக) ஆய்வுரை : இது பரிபாடலின் உள்ளுறுப்புக் கூறுகின்றது. (இபள்) மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டானது, பொதுவாய் நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்கும் தனக்கு உறுப்பாகக் காமப்பொருள் குறித்து வரும் நிலையினதாகும் எ-று. காமப்பொருள் குறித்து வருவது பரிபாடல் எனவே, அறத்தினும் பொருளினும் அத்துணைப் பயின்று வாராது என்பது கருத்தாயிற்று. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே எனச் சிறப்பு விதி யோதினமையால் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலின் கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும் என்பர் இளம்பூரணர். 'கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும், ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியினும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகி வெண்பா வியலாற் புலப்படத் தோன்றுவது” எனவும். இதனுட் சொற் சீரடியும் முடுகியலடியும், அப்பா நிலைமைக் குரிய வாகும்' என வேறு ஒதுதலின் ஏனை நான்கும் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும்’ எனவும் கூறுவர் இளம்பூரணர். 'கொச்சகம் என்பது, ஒப்பினாகிய பெயர்; ஒர் ஆடையுள் ஒருவழியடுக்கியது கொச்சகம் எனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகம் எனப்பட்டது” என்பர் பேராசிரியர். 'பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப வாகலின் அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வருஞ்செய்யுளைக் கொச். சகம் என்றார்” என்பர் நச்சினார்க்கினியர்.