பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<笼蔓一安 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ-ஸ்) அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு அடியளவு முற்கூறியவாறு சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி எனக் குறுவெண்பாட்டிற்கும் நெடுவெண்பாட்டிற்கும் கூறிய அளவேயாகும் எ-று. அங்கதப் பாட்டு வசைப் பொருட்டாகிய மந்திரம் போல்வ தாகலின் அடிவரையில்லாத ஆறனுள் ஒன்றாகிய மந்திரம் போன்று அதற்கும் அடிவரையில்லையோ என்று ஐயுற்ற மாணவனை நோக்கிப் பாட்டாய் வருதலின் அதுவும் அடிவரை - யறையுடையதாயிற்று என ஐயமகற்றியவாறு. எருங். கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை என்றிவை தொகைநிலை மரபின் அடியில் என்ப.! இளம்பூரணம் : என் எனின். அடியளவு வரையறையில்லாத செய்யுள் உணர்த்துதல் துதலிற்று. (இ-ன்). கலிவெண் பாட்டும், கைக்கிளைப் பொருளைப் பற்றிய பாவும். செவியுறை வாழ்த்து, வாயுறைவாழ்த்து, புறநிலைவாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரையறுக்கப்படா: பொருள் முடியுங் காறும் வேண்டிய அடி வரப்பெறும் உன்றவாறு. 2 (கருகூ) இஃது, எய்தாததெய்வித்தது: அளவை கூறாதவற்றுக்கு அளவை கூறினமையின்.3 (இ-ஸ். இவை ஐந்தும் பெருமைக்கெல்லை இத்துணை யெனத் தொகுத்துக் கூறுந் தன்மையுடைய அளவால் வரும் அடியையுடைய அல்ல (எ-று). கலிவெண்பாட்டென்பது ஒருபொருணுதலுதலால் திரியின்றி நடப்பதன்றிப் பன்னிரண்டடியின் இகந்துவந்து, 1. தொகுநிலை யளவி னடியில வென்ப" என்பது பேராசிரியர் நச்சினார்க். கினியர் உரைகளிலுள்ள பாடமாகும். 2. தொகைநிலை மரபின் அடியில’ எனவே பொருள் முடியுங்காறும் வேண்டிய அடிவரப் பெறும் என்றார். 3. அளவை கூறாதவற்றுக்கு அளவை கூறினமையின் இஃது எய்தாதது எய்துவித்தது. حم