பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கா 乐卢G矿 வேண்டி அதனைக் குற்றுகரம்போல நேர்பு, நிரைபு என்னும் அசைகட்கு உறுப்பாகக் கொண்டனர். இங்ங்னம் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழியல் நூலார் எழுத்தாலாகிய அசைகளின் இயல்புணர்ந்து அவற்றை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துரைத்தனராக, பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளின் இறுதியில் நின்ற குற்றுகர முற்றுகரங்களைத் தனியசையாகப் பிரித்து, அவற்றை நேரசையென அடக்கி நேர், நிரை என்னும் இரண்டசைகளையே கொண்டனர். அன்னோர் தாம் ஈரசைச் சீர்களாகக் கொண்ட நேர்பு, நிரைபு என்ப வற்றுக்குத் தேமா, புளிமா என்னும் வாய்பாட்டால் ஒசையூட்டின் செப்பலோசை சிதையுமென்று அஞ்சி அவற்றுக்கு முறையே காசு, பிறப்பு எனக்குற்றுகர வீற்று உதாரணங்காட்டியும், சீரும் தளையும் சிதையவருமிடத்துக் குற்றுகரம் அலகு பெறாது எனத் தனிவிதி வகுத்தும், வெண்பாவீற்றில் சிறுபான்மை முற்றுகரம் வரும் என உடன்பட்டும் இவ்வாறு பல்வேறு வரையறைகளைச் செய்து கொள்வாராயினர். சு. தனிக்குறில் முதலசை மொழிசிதைந் தாகாது. இனம் பூரணம் : என்-எனின். இதுவும் அசைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொடர்மொழிக்கண் மொழி சிதைந்து தனிக் குறில் நேரசை யாகா தென்றவாறு, ! மொழிசிதைத்தலாவது - ஒற்றுமைப் பட்டிருக்கின்றதனைப் பிரித்தல். அஃதாவது புளிமா என்றவழி நிரைநேராக அலகிடாது முதனின்றதனை நேரசையாக்கி யிடை நின்றது.உ மிறுதி நின்றது.ாஉம் நிரையசையாதல். அவ்வழிப் புளி யென்னுஞ் சொல்லைப் பிரிக்கவேண்டுதலின் நிரையசை யாகவே கோடல்வேண்டு மென்றவாறு. இனி, மொழி சிதையாக்கால் நேரசையாம். அது விட்டிசைத்து நிற்றல். 'அக மறியா ... னாட்டை நீ” 1 , மொழிசிதைந்து தனிக்குறில் முதலசையாகாது என இயைத்துப் பொருள் கொள்க. முதலசை - நேரசை, மொழிசிதைத்து' என்பது பேராசிரியர்கொண்ட பாடம்.