பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பர் எருசு ஆசிங் ஆய்வுரை : இது, பரிபாடற்கு அடியளவு கூறுகின்றது. (இ-ள்) பரிபாட்ல் என்னுஞ் செய்யுள், நானூறடி உயர்ந்த எல்லையாகவும் இருபத்தைந்தடி குறைந்த எல்லையாகவும், வரும் என்று. எருசு அள்வியில் வகையே அணைவகைப் படுமே. இாைம்பூரணம் : என்- எனின். மேற்சொல்லப்பட்டவை தொகுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இவ்வதிகாரத்துள் ஈண்டு அதிகரிக்கப்பட்ட் அளவியல் ஈண்டுச் சொன்ன வகைபெறும் என்றவாறு. (கருக) இது, மேற்கூறிய அளவினை வரையறுக்கின்றது. (இ -ன்.) இத்துணையும் அளவியலான்? ஒரு கூறே சொல் லப்பட்டது (எ று). எழுநிலத்தெழுந்த செய்யுள் (476) களுள் அடிவரையறை யுடையனவற்றுக்குக் கூறினான். ஆண்டில்லாதன அடிவரை யின்றி வரும். இலக்கணத்த வென்பது உம் இனிக் கூறுது மென்ப தாம் இதனது பயம்.8 (ருகக்க.) நச்சினார்க்கினியம் : இது பிறன் கோட் கூறல்.: (இ, ள்) யான் கூறிய அளவியலின் கூறுபாடு அத்துணைப் பகுதிப்படும் எ-று. 1. இவ்வியல் ளருய-ஆம் சூத்திரமுதல் , இதுகாறுஞ்சொல்லப்பட்டவை செய்யுளுக்குரிய அடிவரையறை யாகிய அளவியல் பற்றிய விதியாகும் என்பதாம். 2. அளவியலான" என்றிருத்தல் வேண்டும், 3. இதுகாறும் அடிவரையறை யுடையவற்றுக்கு அளவு கூறப்பட்டது. கூறப் படாது. எஞ்சியன அடிவரையின்றி வரும் இயல்பின. அவை இனிக்கூறப்படும் என்பது இச்சூத்திரத்தின் பயனாகும். 4. இங்குச் செய்யுட்குக் கூறிய அளவியலின் கூறுபாடு அத்துணைப்படும் என இந்நூலில் வரையறுத்துக் கூறுமாறு போன்று. பிறர் வரையறை கூறிற்றிலர் எனப் பிறநூற்பொருளைச் சுட்டியது இச்சூத்திரம் எனக்கொண்டு, இது பிறன்கோட் கூறல்" என்றார் நச்சினார்க்கினியர்,