பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/655

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது அை தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்றது யான் சிறப்புடைத்தெனக் கூறிய பெருமைக் கெல்லை அத்துணைப் படுமெனவே பிறர் பெருமைக்கெல்லை கொள்ளாதது சிறப்பின் றென்றவாறாயிற்று. ஆய்வுரை : இது, மேற்குறித்த அளவியலைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ.ள்) செய்யுட்களின் அளவியல் வகை மேற்குறித்த கூறு. பாட்டினை யுடையதாகும். எ-று. அடிவரை யுடையன வாகிய செய்யுளுக்குரிய அளவியல் என்னும் அவை மேற்குறித்த அவ்வகையினவே என ஈண்டு முடித்துக் கூறியதன் பயன், அடிவரையறை யில்லாதனவற்றுக்கு இனிக்கூறப்படும் எனப் புலப்படச் செய்தல் எனக்கொள்வர் பேராசிரியர். னரு.ை எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப. இளம்பூரணம் : என்-எனின். அடிவரையறை யில்லாதன வரையறுத்துணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்). எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு.1 (கருன) பேராசிரியம் : மேலைச் சூத்திரத்தான் அளவியல் வகையை வரையறைப் படுத்தான்; அடிவரையறை யின்மையும் அளவியலென்பதுங் குறிப்புக் கருதா இலக்கணமாகிய செய்யுள் கூறினான் இச்சூத் திரத்தா னென்பது. 2 (இ - ள்) அகமும் புறமுமாகிய எழுநிலத்துந் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தளவு ஆறாம் (எ - மு). 1. எழுநிலத்தெழுந்த செய்யுள்வகையானவன, பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஏனைய ஆறும் அடி வரையறை யில்லாதன என்பது இளம்பூரணர் கொண்ட பொருள். 2. இத்தொடரின் அமைப்பு தெளிவாக வில்லை. 3. எழுநிலம் என்றது அகமும் புறமும் என எழுவகைக்கூறுபட அமைந்த தினைகளை,