பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுஅ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரை வளம் ஆய்வுரை : இது மேற்கூறப்பட்ட உரைநடையினை மேலும் பகுத்துரைக் கின்றது. (இ.ள்) மேல் நால்வகைப்பட வகுத்த அவ்வுரைவகையும் மற்றொரு திறத்தால் இரண்டாகப் பகுத்துரைக்கப்படும் எ-று. அவையாவன மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவும் என இருவகையாம் என்பர் இளம்பூரணர். முற்குறித்த உரைவகை நான்கனுள் பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின்றெழுந்த கிளவி என்னும் முன்னைய விரண்டும் ஒரு கூறாகவும் பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி என்னும் பின்னைய விரண்டும் மற்றொரு கூறாகவும் இரு வகைப்படும் என்டர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். ளகrஅ ஒன்றே மற்றுஞ் செவிவிக் குரித்தே ஒன்றே பார்க்கும் வரைநிலை யின்றே. இளம்பூரணம் : என்-எனின். மேல் இருவகைப்படும் என்ற உரையை யுரைத்தற்குரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ன்.) மகளிர்க்கு உரைக்குமுரை செவிலிக்குரித்து. மைந் தர்க்கு உரைக்குமுரை யெல்லார்க்கு முரித்தென்றவாறு. செவிலி இலக்கணத்தின் உரைக்கின்ற வுரையும், பாட்டி லுரைக்கின்ற வுரையும் கூறுவளோவெனின், அவ்விடங்களில் வரும் உரை பொருள்பற்றி வருதலின் அப்பொருள் கூறுவளென்க.! அன்றியும் அதுவே தானும் என்பது பொருளொடு புணர்ந்த நகைமொழியைச் சுட்டிற்றாக்கி அம்மொழியிரண்டு கூறுபடு மெனப் பொருளுரைப்பினும் அமையும்.2 (ககrஅ) மேற்குறித்த உரைவகை நடை நான்கனுள் பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் என இவ்விலக்கண வமைப்பில் செவிலி உரை நிகழ்த்தாளாயினும் இவ்விடங்களில் வரும்பொருள் பற்றிக் கூற்று நிகழ்த்துவள் என்பது கருத்து. 2. இவ்வுரைவிளக்கம்மேலைச் சூத்திரத்திரத்தினைக் குறித்து எழுதப்பெற்ற தாகும். செவிலிக்கேயுரியது என்றும் அவ்வரையறையின்றி ஆண்பெண் இருபாலார்க் கும் ஒப்பவுரியது என்றும் உரைவகை நடையினை இருதிறமாகப் பகுத்துரைத்தல் மரபு என்பது பட ஒன்றே மற்றுஞ் செவிலிக் குளித்தே, ஒன்றே யார்க்கும் வரை நிலை யின்றே, என்றார் எனினும் பொருந்தும்,