பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஅம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் மொழியே மந்திரம் என ஈண்டுச் சிறப்பித்துரைக்கப்படும் என்றற்கும் மறைமொழி தானே எனப் பிரித்துரைத்தார் ஆசிரியர். எனவே சபித்தற்பொருட்டாகிய மந்திரச் செய்யுளை அங்கதப்பாட்டெனவும் வசைப்பொருட்டாகாது உலகநலங் குறித்து வரும் மறைமொழியினையே மந்திரம் எனவும் வழங்கு தல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு புலனாம். திருமூலநாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருமந்திர மாலை தொல்காப்பியனார் கூறிய இலக்கணத்தின் படி அமைந்த தமிழ் மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகத் திகழ்தல் உணர்ந்து போற்றத்தகுவதாகும். ள எஉ எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே : இாைம்பூரணம் : என்-எனின். குறிப்புமொழி ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிச் சொல்லினா னுணரப்படும் பொருளின் புறத்ததுவே குறிப்பு மொழி என்ற வாறு. மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்பு:மொழி யென்றதனான் இச்சொல் வசைகுறித்து வருமென்றுகொள்க. புகழ்குறித்து வந்தாற் குற்றமென்னையெனின், அதனை வெளிப்படக் கூறக் கேட்டார்க்குந் தனக்கும் இன்பம் பயத்தலிற் குறிப்பினாற் கூறல் வேண்டுவது வசையென்று கொள்ளப்படும். (க ைஉ} 1. குறிப்பு:மொழியென்." என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியம் உரைகளிற் கண்ட பாடமாகும். 2. மேல் அடிவறையரை. யுள்ள பாட்டில் பழிகரந்து மொழிதலாகிய அங்கதப்பொருள் வரும் எனக்கூறி இங்குக் குறிப்புமொழி எனக் குறித்தமையால் இங்கே குறிப்புமொழி, என்பது வசை குறித்து வருவது எனக்கொண்டார் இளம்பூரணர். எனவே பாட்டாய் வரும் வசை அங்கதம் எனவும் உரையாய் வரும் வசை குறிப்பு மெர்ழி எனவும் வழங்கப்படும் என்பதாம். 3. புகழ் குறித்ததாயின், அதனை வெளிப்படக்கூறின் கேட்டார்க்கும் தனக்கும் இன்பம் பயக்குமாதலின் அதனைக் குறிப்பினாற் கூறுதல் பயனின்றாமாதலின், வசைகுறித்து வருவதனையே குறிப்புமொழி என்றார் ஆசிரியர் என்பதும் இவ்வுரை விளக்கங்களாற் புலனாம்.