பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。球毋劉 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இவையெல்லாம் உரையிற்கோடல் என்பதனானும் பிறநூல் முடிந்தது தானுடம்படுத லென்பதனானுங் கொள்க. (கஎரு) அடிநிமிர் கிளவி பீரா றாகும். இதுவும் அது. o & to t. (இ-ஸ்) அப்பண்ணத்தியின் அடிப்பெருக்கங் கிளக்குங்காற் பன்னிரண்டாம் (எ.று). 1. மூன்றடியான் வந்து வெண்பாப்போல முடிவது வெண்டாழிசையாகும். சித்தியல் வெண்பா ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவரின் வெள்ளொத்தாழிசை யென்பர். அடிவரையறையின் ரிச் சிலசீர் மிக்குங்குறைந்தும் வருவது கவித்தாழிசையெனப்படும், இத்தாழிசை ஒருபொருள். மேல் மூன்றடுக்கிவரினும் ஈற்றடிமிக்கு வருதலால் கொச்சகவொரு போகெனப்படா கலித்தாழிசையெனப்படும் என்றார் இளம்பூரணர். குறளடி நான்கினால் தனித்துவருவது வஞ்சித்துறையெனப்படும். மூன்றடிச் சிறுமையாக ஏழடிப்பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் மிக்குங் குறைந்தும் வருவது வெண்டுறையாகும். நெடிலடி (ஐஞ்சிரடி) நான்கினால் வருவது கலித்துறையாகும். ஐஞ்சீரடி நான்கினால் வருவதனைக் கலித்துறையெனவும் நெடிலடிதான்காய் நேரசை முதலாகப் பதினாறெழுத்தும் நிரையசை முதலாகப் பதினே ழெழுத்தும் பெற்று. வருவதனைக் கட்டளைக்கவித்துறை யெனவும் வழங்குதல் மரபு. அறுசீரடி முதலாகிய கழிநெடிலடியினால் நான்கடியும் அளவொத்துவருவது ஆசிரிய விருத்தம் ஆகும். முச்சீரடி தான்கினால் வருவது வஞ்சிவிருத்தம் ஆகும். நான்கடியினாலாவது மூன்றடியினாலாவது அடிதோறுந் தனிச்சொற்பெற்று வருவது வெளிவிருத்தமாகும்: நாற்சீரடி நான்கினால் வருவது கலிவிருத்தம் எனப்படும். இவையெல்லாம் இரண்டெனத் தொடுத்தும் நான்கென வகுத்தும் ஆறென - விரித்தும் கூறிய இயற்றமிழ்ப்பாக்களின் இலக்கணத்திற்சிதைந்து மேற்குறித்த பாக்களின் இயல்பினவாய் இசைத்திறத்திற் குரியவாகிவருதலின் பண்ணத்தியெனப்படும் பாவினம் ஆயின என்பதும், பாவினம் பற்றிய இவ்விளக்கங்கள் உரையிற்கோடல் என்னும் உத்தியானும் பிறநூ. ன்முடிந்ததுதானுடம்படுதல் என்னும் உத்தியாலும். இவ்வியற்றமிழ் நூலில் இளம்பூரண அடிகளால் தந்துரைக்கப்பட்டன என்பதும் இங்கு உளங்கொனத். தக்கனவாகும், பாட்டின் இயலபண்ணத்தி எனத்தொல்காப்பியனார் ஒதுதலின் இயற்றமிழிற் கூறப்படும் பாட்டு வேறு என்பதும், அவற்றின் இயல்பினை இகுவாற்றாற் பெற்றுவரும் இசைத்தமிழ்ப் பாட்டாகிய பண்ணத்தி வேறு என்பதும் இனிது புலனாதலறிக.