பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/709

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ கூ அ; தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் எடுத்தோதிய வகையானென்பது நூலும் உரையும் நந்நான் கெனவும், பிசி இரண்டெனவும், முதுமொழியும் மந்திரமுங் கூற்றிட்ை வைத்த குறிப்பும் ஒரோவொன்றெனவுங் கூறிவந்த வகையான் அவற்றை இணைத்தென் றெண்ணி அளந்த பகுதியும் அளவியலேயா மாகவின் அவ்வளவியல் அடிவரையறை கூறிய வாற்றானும் அடி வரையறையிலவற்றுக்குக் கூறியவாற்றானும் இருவகைப்படும் அளவியலென்றவாறு : (கஅச) ஆய்வுரை : இது, மேற்கூறப்பட்டனவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) மேல் எடுத்துக் கூறிய வகையாற் சொல்லப்பட்டனவற்றை ஆராயின் அளவியலாகிய பகுதி மேற்குறித்த வகையினையுடையதாகும் என்று. மேற்குறித்த வகையென்றது, அடிவரையறையுடையதும் அடிவரையறையில்லாததும் ஆகிய இருவகையினை, இவ்வியலில் வரும் அளவியல் வகையே அனைவகைப் படுமே என்னும் 156ஆம் சூத்திரம் அடிவரையறையுடைய பாவிற்குக் கூறப்பட்ட அடிவரையாகிய அளவியலைத் தொகுத்துணர்த்துவதெனவும், 'கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின்' எனவரும் இச்சூத்திரம் எழுநிலத்தெழுந்த செய்யுள் இவையென வரையறுத்து உணர்த்துவதெனவும் எனவே இது கூறியது கூறலாகாதெனவும் இளம்பூரணர்தரும் விளக்கம் இங்கு மனங்கொளத் தகுவதாகும். என எ கைக்கிளை முதலா ஏழ்பெருந் திணையும்? முதற்கிளந் தனவே முறையி னான.? இளம்பூரணம் : என்- எனின். நிறுத்தமுறையானே திணையாமாறு உணர்த். துதல் நுதலிற்று. (இன். திணையாவது கைக்கிளை முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் பெருந்திணை யென்பன. அவை முறைமை யினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு. 1. மேற்குறித்த அளவியல் அடிவரையறையுடைய பகுதியும் அடிவரையறை யில்லாத பகுதியும் என இருவகைப்படும். 2. எழுபெருந்திணையின்' எனவும், 3. முறைநெறிவகையின்' எனவும் பாடங்கொள்வர் பேராசிரியரும். நச்சினார்க்கிளியரும்.