பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அக తఖి . ஆய்வுரை : இது, மேற்சொல்லப்பட்டவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) பொருள் பெற மேற்கூறப்பட்ட களவும் கற்பும் ஆகிய அவ்விரண்டுமே கைகோள் வகையாகும் எ-று. எனவே “அகத்திற்குப் புறனாயினும், புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக் கூறப்படா. பொது வகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாகி யடங்கும்” என்றார் பேராசிரியர். எ1 அக பார்ப்பரின் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு அளவியல் மரபின் அறுவகை யோருங் களவிற் கிளவிக் குரியர் என்ப. இனம் பூரணம் : என் -எனின். இனிக்கூறப்படுவாரை உணர்த்துவார் களவின் கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) பார்ப்பான் முதலாகச் சொல்லப்பட்ட கலந் தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற்குரியரென்றவாறு.? ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற் குடம்படுவாரென்று கொள்க. பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன். பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன். (கஅக) பேராசிரியம் : இது, கூற்றென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ஸ்) எண்ணப்பட்ட அறுவருங் களவொழுக்கினுள் (107) நிகழ்ந்தன கூறினாராகவல்லது ஒழிந்தோர், கூறினாராகச் செய்யுள் செய்யப்பெறார் (எ-று). 1. களவினிற் கிளவிக்குரியர். என்பதும் பாடம். 2. அளவியல் மரபாவது, மனைவாழ்க்கையில் கணவன் மனைவி ஆகிய இருவரிடத்தும் அன்பினால் உரையாடிப் பழகும் இயல்பு. கனவொழுக்கத்திற் கூற்று நிகழ்த்தற்குரிய அறுவகையோருள் தலைவன்பால் அறிவுரிமை பூண்டொழுகும் தோழன் பார்ப்பான் எனவும், அன்புரிமை பூண்டொழுகுந் தோழன் பாங்கன் எனவும் கொள்ளுதல்ஏற்புடையதாகும்.