பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம் عين يك تي يَتم (1)பார்ப்பானென்பான், நன்றுந் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவா னெனப்படும். (2)பாங்க னென்டான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின்றொழுகி வருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். (3)தோழி அவன் போன்றும் பெண்பாலாகலின் அவளைப் பின் வைத்தான். ()செவிலிமாற்றஞ் சிறுவரவிற் றாத லின் அவளை அவளின்பின் வைத்தான். அவரிற் சிறந்தமையிற் சீர்த்தகு சிறப்பிற் (5) கிழவனையுங் () கிழத்தியையும். அவர் பின் வைத்தான். அவ்விருவருள்ளுந் தலைமகளது கற்றே பெரு வரவினதாகலின் அவளை ஈற்றுக்கண் வைத்தானென்பது.1 உ-ம் "சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே” (கலி :9) என்பது, பார்ப்பான் கூற்று. “காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் முதைச்கவற் கலித்த முற்றா விளம்புன் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பேருந்தோ ளோயே” (குறுந்; 204) என்பது, பாங்கன் கூற்று. 'ஏனல் காவ லிவளு மல்லள் சொல்லு மாடுப கண்ணி னானே' என்பது, தோழி கூற்று. "பெயர்த்தெனன் முயங்கயான் வியர்த்தன னென்றனள் ஆம்பன் மலரினும் தான்றண் ணியளே” (குறுந் ;84) என்பது, செவிலி கூற்று. "பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி' (அகம் :48) என்பதும், அது. 1. களவிற்கூற்று நிகழ்த்தற்குரியராகக் கூறப்பட்ட அறுவரும் அன்பினால் உள்ளம், ஒன்றித் தம்முள் உடனுரையாடுதற்குரிய நட்பினர் என்பதுபுலப்படுத் துவார் அளவியல் மரபின் அறுவகையோர்' என்றார். ஆசிரியர்.