பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அக இகீடு 'கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே' (குறுந் , 280) என்பது, கிழவன் கூற்று. “விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்றி, நின்மார் படைதவி னினிதா கின்றே’ (அகம் ; 58) என்பது, கிழத்தி கூற்று. பிறவம் அன்ன. (கஅகச) நச்சினார்க் திணியம்: இது கூற்றென்னு முறுப்புணர்த்துகின்றது. (இஸ்.), பார்ப்பான் முதலாகக் கிழவன் கிழத்தியோடெண்ணப்பட்ட கூற்றிற்கு எல்லையாக நடந்த முறைமையை யுடைய அறுவருங் களவொழுக்கத்து நிகழ்ந்தன கூறினாராக வல்லது ஒழிந்தோராகச் செய்யுள் செய்யப்பெறார். எ-று. நன்றுந் தீது மாராய்ந்து உறுதி கூறுதலிற் பார்ப்பானை முற் கூறித் தலைவன்வழி நின்றொழுகும் பாங்கனைப் பிற்கூறினார். தோழி கூற்றிற் செவிலி கூற்றுச் சிறுபான்மை வருதலின் அதனைப் பின்வைத்தார். சிறப்புடையன பிற்கூறினார். அவ் விரண்டும் ஒன்றற்கொன்று சிறப்புடைமையு முணர்க. உ-ம். "சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே’ (கவி-க)ை இது பார்ப்பான் கூற்று. 'காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் . ... ... ... தோளோயே” (குறுந், உளச). இது பாங்கன் கூற்று. ஏனைய முன்னர்க் காட்டினாம். ஆய்வுரை : இது, நிறுத்த முறையானே கூற்று என்னும் உறுப்புணர்த் தத்தொடங்கிக் களவினுள் கூற்று. நிகழ்த்துதற் குரியாரைக் கூறுகின்றது. 1. ஒழிந்தோர் கூறினாராகச்' என்றிருத்தல் வேண்டும்.