பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கொள்ளப்படுவன வெனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று நிலை மொழியாகிய நேர்பு நிரைபிற்கு உறுப்பாவன கண்டு வரு மொழியுகரம் ஈண்டும் அதுபோல அவற்றிற்குறுப்பாங்கொல் லென்று ஐயுற்றானை ஐயுறற்கவெனவுங் கூறினமையின். (இ - ள்.) முற்றியலுகரம் மொழி சிதைத்துக்கொளாஅஇருவகையுகரமு மியைந்தவை வருங்கால் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்று வாங்கிக் கொடுக்கப்படா; நிற்றலின்றே யீற்றடி மருங்கினும்-அங்ங்ணம் வாங்கிக் கொடுக் கப்படாவாயின், நேரசை திரையசைப் பின்னர் முற்றுகரம் ஈறாகி வருஞ்சொல்லும் உலகத்தரியவாயின் முற்றுகரத்தால் நேர்பும் நிரைபும் ஆமாறென்னை யென்றார்க்கு அடியிறுதிக்கணல்லது முற்றுகரம் புணர்ச்சிவகையான் இடைநில்லாதன வாயின கண்டா இயன்ப துணர்த்தியவாறு. 'இன்று என ஒருமை கூறினமையின் எடுத்தோதிய முற் றுகரமே கொண்டு இலேசினாற் றழிiஇய குற்றுகரங் கொள்ளற்க. மற்றிதனை இலேசினாற் கொண்டதென்னையெனின், நுந்தை யென்னும் ஒருமொழிக்கனன்றி வாராமையின் அதன் சிறு வரவுநோக்கி உம்மையாற் கொண்டானென்பது. முற்றுகரம் மொழிசிதைத்துக்கொளாவெனவே ஒற்றுார்ந்துவரினுந் தனித்து வரினும் உடன்விலக்குண்ணு மென்பது. "நாணுடை யரிவை' (அகம். 34) என்றவழி, 1 , முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ எனவரும் சூத்திரத்திற்கு உரைவரையு மிடத்து முற்றியலுகரமும்’ என்ற உம்மையால் மொழிமுதற்’ குற்றுகரமாகிய நுந்தை யென்பதனையும் தழுவிக்கொண்டு இருவகையுகரமும் இயைந்தவை வருங்கால் வருமொழியைச் சிதைத்துப்பிரித்து அவற்றினின்று வாங்கிக்கொடுக்கப்படா எனவும், நிற்றலின்றே ஈற்றடிமருங்கினும் எனவரும் இரண்டாமடிக்கு, , அடியிறுதிக்கனல்லது முற்றுகரம் புணர்ச்சிவகையான் இடை நில்லாதனவாயின' எனவும் பொருள்வரைந்து (இரண்டாமடியில்) இன்று' என ஒருமை கூறினமையின் எடுத்தோதிய முற்றுகரமே கொண்டு குற்றுகரங் கொள்ளற்க எனவும், மொழிமுதற் குற்றுகரம் துந்தை யென்னும் ஒரு மொழிக் கனன்றிவாராமையின் அதன் சிறுவரவுநோக்கி உம்மையாற்கொண்டான் ஆசிரியன் எனவும் விளக்கம் கூறினார். ஈற்றடி மருங்கின்' என்பதற்கு அடியிறுதிக் கண்' எனப்பொருள் வரைந்தார்பேராசிரியர். ஈற்றடி மருங்கினும் என்ற உம்மையால் அடியிற்றில் மட்டுமன்றி மொழியீற்றிலும் இடையினும் முற்றுகரம் உரியசையாக வரும் என்பது, இச்சூத்திரவுரையின் இறுதியிற் பேராசிரியர் காட்டும் உதாரணங்களால் நன்கு புலனாம்.