பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/755

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஈண்டுக் கூற்றும் உடன் கூறினான் மேலிவற்றை வரை யறுத்துக் கூற்றிற்கு உரிய வென்றில னாகலின் புலம்புறு பொழு தென்பது மாலையும் யாமமும் எற்பாடும் காரும் கூதிரும் பணியும் இளவேனிலும் GLTi೧೯7, 'பிறவு மென்றதனால் புல் புதல் முதலியன கொள்க. அவற்றுட் சில வருமாறு: "கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ’’ (கலி:142) என்றாற் போல்வன கண்டுகொள்க. (உ0க) நச்சினார்க்கினியம் : இது கேட்போருங் கூற்றும் வேறுபட வருமாறு கூறுகின்றது. அவை பொருளியலுள் வழுவமைதி கூறுவனவுங் கேட்குநவமாய் ஈண்டு வருதலின் ஆராய்கின்றார். (இ.கள்). ஞாயிறுமுதல்நெஞ்சீறாக் கூறியனவும் அவை போல் வன பிறவும் மேற் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்' (பொருளியல்.உ) எனப் பொருளியலுட் பொதுவகையாற் கூறிய 1. காட்சி, ஐயம், துணிவு, புணர்ச்சி, நயப்பு, பிரிவு. பி.சிவச்சம், வன்புறை எனத் தம்முள் தொடர்புடையனவாய் ஒத்த இலக்கணத்தன பலவும் ஒரிடத்துத் தொக்கு நிகழ்தற்கு இடனாயது காமப்புணர்ச்சியாதலின், வினைசெய் யிடமாகிய அஃது இயற்கைப் புணர்ச்சியென ஒரிடமாயிற்று. பாங்கற் கூட்டம் முதலியவற்றுக்கும் இவ்விளக்கம் ஒக்கும். "ஞாயிறு திங்கள் என்னும் சூத்திரத்தின் பின்னர் அமையவேண்டிய இச்சூத்திரம் பேராசிரியருரைப் பதிப்பில் பரத்தைவாயில் என்னும் சூத்திரத்திற்கு முன் முறைபிறழ வைக்கப்பட்டுள்ளது. 'பரத்தைவாயில்' , 'வாயிலுகாவே , ‘ஞாயிறு திங்கள்' என்னும் முதற்குறிப்புடைய மூன்றும் கூற்று, கேட்போர் என்னும் செய்யுட்களைப் பற்றிய விதிகளாதலின், அவை கூறிமுடிந்த பின்னரே களன்' என்னும் உறுப்புப்பற்றிய சூத்திரம் அமைதல் முறை. அம்முறையிலேயே இளம்பூரணருரையிலும் நச்சினார்க்கினியருரையிலும் களன் என்னும் உறுப்புணர்ந்ததும் சூத்திரம் இடம் பெற்றிருத்தலால், அம்முறையே இப்பதிப்பிலும் மேற்கொள்ளப்பெற்றது. 'கேளாதன சிலபொருள் கேட்பனவாகப் பொருளியலுள் வழுவமைக்கப் பட்டனவற்றை இலக்கண வகையாற் கூறுவனவும் கேட்குதவும் ஆகற்கண்ணும் ஆராய்கின்றான்' என இச்சூத்திரத் திற்குப் பேராசிரியர் வரைந்துள்ள கருத்துரையின் துணைகொண்டு இவ்வுரைப்பகுதியின் பொருள் அறியற் பாலதாகும்.