பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச.அ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரை வளம் இடமெனினுங் களமெனினும் ஒக்கும். ஒரு செய்யுட்கேட்டால் இஃது இன்னவிடத்து நிகழ்ந்ததென்று அறிதற்கேதுவாகியதோர் உறுப்பினை இடமென்றானென்பது. ஒரு நெறிப்படுதலென்பது, ஒருவழிப் பலவுந் தொகுதல்; ஒரியலென்பது அவற்றுக்கெல்லாம் இலக்கணமொன்றாதல்: அஃதாவது, காட்சியும் ஐயமுந் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுமென்று இன்னோரன்ன எல்லாம் ஒரு நெறிப்பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஓரிலக்கணத்தான் முடியுமென்பது. கருமநிகழ்ச்சி யென்பது காமப்புணர்ச்சி யென்னுஞ் செயப்படு பொருணிகழ்ச்சி. அஃது இடமெனப்பட்டது. இது வினைசெய்யிடம் நிலமாயின முன்னர்த் திணையெனப்பட்டது. காலம் முன்னர்ச் சொல்லுதும் "எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப” (குறுந்:129) என்னும் பாட்டும், “கேளிர் வழியோ கேளிர் நாளுமென் னெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சில் லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாக மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே'. {குறுந் 280) என்னும் பாட்டும் பாங்கற்கூட்டமே இடனாக ஒருவழிப்பட்டன; என்னைநிேன் வேறுபாடு எற்றினா னாயிற்றென்று வினவிய பாங் கற்கு இதனினானாயிற்றென்று உரைத்தது உம் அதற்குப் பாங் கன் கழறினானை எதிர்மறுத்தது உமென இரண்டும் பாங்கற் கூட்டத்துப்பட்டு ஓரியலான் முடிந்தன. அவை மேற்கூறிய வகையானே கண்டுகொள்க. (ககூஅ) நச்சினார்க்கினியம் : இது களமெனப்பட்ட வுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்) பலவும் ஒருவழித் தொக்கவற்றுக்கெல்லாம் ஒரிலக் கணத்தான் முடியுங் கருமநிகழ்ச்சியை யிடமென்று கூறுப. எ-று. களமெனினும் இடமெனினு மொக்கும். அது ஒருசெய்யுட் கேட்டால் இது இன்ன இடத்து நிகழ்ந்ததென் றறிதற்கு 1. 'பரத்தையும் வாயில்களு மென்னும் இரண்டு வேறுபாட்டினும்: எனவரும் பேராசிரியருரை கொண்டு. அவர் கொண்டபாடம் 'பரத்தைவாயில் எனவிரு வீற்றும் என இளம்பூரணருரையிற் கண்டபாடமே என்பதும் எனவிருகூற்றும்" என்ற பாடம் பிழைபட்டதென்பதும் நன்கு தெளியப்படும்.