பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/760

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ன கூ க. ஆ. சி. இது ஏதுவாயதோ ருறுப்பு. அது காட்சியும் ஐயமுந் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் இன்னோரன்னவும் ஒரு நெறிப்பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஓரிலக். கணத்தான் முடியுமென்பது. கரும நிகழ்ச்சியென்பது காமப் புணர்ச்சியென்னுஞ் செயப்படுபொருணிகழ்ச்சி. இது வினை. செயிடம். "எலுவ சிறாஅர்" (குறுந்-க உக) கேளிர் வாழியோ' (குறுந் உஅ0) என்பன பாங்கற் கூட்டமிடனாக ஒருவழிப்பட்டன. பிறவு மன்ன இது புறத்திணைக்கு மொக்கும்: ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே செய்யுட்குரிய களன் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது (இ-ள்) ஒருநெறிப்பட்டு ஓரியல்பாக முடியும் கரும நிகழ்ச்சி இடம் எனப்படும் எ-று. ஒரு செய்யுளைக் கூறக்கேட்டால் இதன்கண் கூறப்படும் பொருள் நிகழ்ச்சி இன்ன இடத்து நிகழ்ந்தது’ என அறிந்து கொள்ளுதற்கு ஏதுவாகியதோர் உறுப்பு இடம் எனப்படும். இடமெனினும் களம் எனினும் ஒக்கும். ஒருநெறிப்படுதலாவது, அகத்திணை புறத்திணை என்பவற்றுள் ஏதேனும் ஒருதிணைக்கண் வருதல். ஒரியல் முடிதலாவது, அகத்திணைக்கண் களவு கற்பு என்பவற்றுள் ஒன்றைப் பற்றியோ அல்லது அவற்றின் விரியாகிய இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலியவற்றுள் ஒன்றைப் பற்றியோ இனி, புறத்திணைக்கண் நிரைகோடல், மீட்டல், மேற்சேறல் முதலியவற்றுள் ஒன்றைப் பற்றியோ வருதல் கருமநிகழ்ச்சி. யாவது, மேற்கூறிய அகமும் புறமும் ஆகிய பொருட்பகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப்பற்றி நிகழும் வினைநிகழ்ச்சி. இது 'வினைசெய்இடம் எனப்படும். காடுறையுலகம் முதலாக மேற். சொல்லப்பட்ட நிலப்பகுதிகள் முன்னர்த் திணையென அடக்கப்பட்டன. ஆதலால் ஈண்டு இடமென்றது வினைசெய் இடத்தையே யென்பது நன்கு புலனாம். இனி, கருமநிகழ்ச்சி யென்றதனால் அந்நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய தன்மை முன்னிலை படர்க்கை என்பனவும் இடமெனக் கொள்ளப்படும். 1. பேராசிரியர் உரையுடன் ஒப்புநோக்குக.