பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் கருஅ இஃது, எய்திய திகந்துபடாமைக் காத்தது. (இ.ஸ்) இதுவும் மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே ; பிறி திலக்கணத்தனவென்று கொள்ளற்க (எ-று).! எனவே, "நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை” (தொல்-மெய்ப் 3) என அவை நந்நான்காமெனவும் மெய்ப்பாட்டியலுட் கூறியவா றெல்லாம் பிறவாற்றான் வேறுபடுவனவுங் கொள்ளப்படுமென்ற வாறு. (உ0ரு) இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை கிடைத்திலது. இவ்வியலிற் பேராசிரியர் உரையினையே நச்சினார்க்கினியர் பெரிதுந் தழுவி உரை வரைந்திருத்தலால் இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் வரைந்த வுரையே நச்கினார்க்சுனியர்க்கும் உடம்பாடானதென்று கொள்க. ஆய்வுரை : இது, முன்னர் மெய்ப்பாட்டியலிற் கூறிய மெய்ப்பாட்டின் இலக்கணம் இகந்துபடாமைக் காக்கின்றது. (இ ள்) முற்கூறிய மெய்ப்பாடாகிய அது, நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டு நெறியினையும் பிழையாதாகி, மேல் மெய்ப்பாட்டியலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தையுடைய தாகும். எ-று முன்னுறக் கிளந்த முடிவினது என்றது முன் மெய்ப்பாட்டி யலிற் கூறப்பட்ட இலக்கணத்திற் பிறழாது வருதலை. முடிவினது அது என்பதனை அது, முடிவினது எனமாறிக் கட்டுக. அது என்றது, முற்கூறிய மெய்ப்பாடென்னும் உறுப்பினை. .سسسسسسسسسسسسسسسسه-سمسسسسسسسسسسسسسسسسسسسسسسسسه 1. செய்யுட்கு உறுப்பாக இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு முன் மெய்ப் பர்ட்டியியலிற் கூறப்பட்ட அவ்விலக்கணத்ததேயன்றி அதற்குப் பிறிதான இலக்கணத்த்தன்று என்பத்ாம்.