பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ இன் ஆ! தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் உறுப்பெனவும் ஒதிவந்த இலக்கணத்த தன்றாயினும் அது பெறு மெனவும் கூறினானென்பது. நச்சினார்க் கினியம் : இது துறையென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இபள்) அவ்வ...ஹி எ-து ஐவகை நிலத்திற்கு முரியவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஒதிவந்த வாறன்றி, பிற திறவதின் நாடியவண் வரினும் எ-து பிறவற்றைத் திறவிதாக ஆராய்ந்த செய்யுட்கண்ணே புலவன் படைத்துச்செய்யினும் ஒக்கும்.2 உ-ம். 'ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணிர்க்காற் கொழுநிழன் ஞாழன் முதிரினர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தாகொடு தாழி வகன்மதி தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் திங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாவைகொ னல்லா ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள் கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்சொ லாண்டார் கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கத்த வீங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள்' (கலி. ரு ) இதனுள் ஞாழல்முடித்தாளென. நெய்தற் றலைவி போலக்கூறி "ஊர்க்கா னிவந்த பொதும்பருள்” என்றதனான் மருதத்துக்கண்டான்போலக்கூறிப் பின் குறிஞ்சிப்பொருளாகிய புணர்தல் `ു உரியவாகக் கூறப்படும் கருப்பொருள்களுள் மக்களேயன்றித் தலைவனும் தலைவியும் நிலம்பெயர்ந்து மயங்குமாறும் முல்லை முதலாகப் பகுத்துரைக்கப்பட்ட நான்கு திணையும் ஒன்றோடொன்று மயங்கு மாறும் கூறி இவ்வாறு முன்னர்க்கூறிய இலக்கணத்தில் அடங்காததாய்ப் புலவர்களால் செய்துகொள்ளப்படுவது துறை யென்னும் செய்யுளுறுப்பாகும் எனவுணர்த்துவது இச்சூத்திரமாகும். ஆகவே இவ்விதி, கருப்பொருள் மயக்கங்கூறும் எந்தில் மருங்கிற் பூவும் புள்ளும்(தொல், அகத்திணை. ம்,ன்) என்னுஞ் சூத்திரத்தால் முடியாது. ஆதலின் இதனைத் தனியே எடுத்துரைத்தார் ஆசிரியர். 2. அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமைக் செய்யின் அது மார்க்கமெனப்படும் என்றவாறு' எனவரும் பேராசிரியர் உரைத்தொடரைக் கூட்டி இச்சூத்திரப்பொருளை நிறைவு செய்து கொள்க.