பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உளங் க. எங் (இ-ள்) செய்யுளிடத்தே கூறப்படும் பொருள் சேய்மைக் கண்ணே கிடப்பினும் அன்றி அணுகிய நிலையில் நிற்பினும் ஒரு தொடர்புபட அமைந்து பொருள் முடியும்படி கொண்டுவந்து இயைத்துணர வைத்தல் மாட்டு என்னும் உறுப்பென்று சொல் வர் செய்யுள் வழக்குணர்ந்த அறிஞர் எ-று. செய்யுளிடத்தே அகன்றும் அணுகியும் கிடந்த பொருள் களைக் கொண்டுவந்து ஒரு தொடராகக் கூட்டி முடித்தல் மாட்டு என்னும் உறுப்பாகும் என்பதாகும். மாட்டுதலாவது, தனித்து நிற்பதனை முன்னும் பின்னும் இயைபுடையதாயுள்ள பிறிதொன்றனோடு கொண்டுவந்து கூட்டி முடித்தல். “இது, பல்பொருட்டொடராற் பலவடியான் வரும் ஒரு செய்யுட்கண்ணும், பல செய்யுளைப் பலபொருட் டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும்’ எனவும், "அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்தசொல் தொடர்ந்து பொருள் தருவதோர் இன்பம் நோக்கிச் சான்றோர் இம்மாட்டிலக்கணமே யாண்டும் பெரும்பான்மையும் வரச் செய்யுள் செய்தார் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். உதாரணம் முன்னுரைகளிற் காண்க. உளங். மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி உடனிலை மொழியினுந் தொடைநிலை பெறுமே. இனம் பூரணம் : இவையிரண்டுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும் (э_ОIВ ) இது, மேற்கூறியவற்றுள் ஒருசாரனவற்றுக்குப் புறனடை, (இ - ள்.) மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் அச் செய்யுளுட் கிடந்தவாறே அமையச் செய்யவும்பெறுஞ் செய் யுள் (எ று).2 1. தொடர்நிலை பெறுமே" என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். உடனிலை மொழிதலாவது சொல் தொடர்ந்தவாறே அமைய வெளிப்படச் செய்யுள் செய்தல், 2. உடனிலைமொழிதலாவது, செய்யுளிலமைந்த தொடர்கள் தம்முள் பொருளியை புடையனவாய்த் தொடர்ந்து கிடப்பச் செய்யுள் செய்தல்.