பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - உளசு இ.5 சில நச்சினார்க்கினியம் : இது மேற்கூறப்பட்ட வண்ணங்களினது பெயர்வேறுபாடு கூறுகின்றது (இ ள்). முற்கூறிய நாலைந்தும் அவ்விருபது பெயர் வேறு." ஆய்வுரை : இது, மேற்குறித்த வண்ணங்களின் பெயர்களை விரித்துக் கூறுகின்றது. (இ-ள்) வண்ணமாவன பாஅவண்ணம், தாஅவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப் பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரு உ வண்ணம், எண்ணு வண்ணம். அகைப்பு வண்ணம், துரங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், முருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என மேற்குறித்த அவை என்று கூறுவர் வண்ணத்தியல்பறிந்த ஆசிரியர் எ-று. ஆங்கு என மொழிப மேற்குறித்த அவையென்று கூறுவர். அவற்றுட் பகஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் இாைம்பூர னம் : என். எனின். பா வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ன்) பாஅ வண்ணமாவது சொற்சீரடியாகி நூலின் கட் பயின்றுவரும் என்றவாறு: 'அ. இ. உ. அம்மூன்றுஞ் சுட்டு, (தொல். எழுத். நூன்மரபு.க.க) கொல்லே ஐயம் எல்லே இலக்கம்’ (தொல். சொல் இடை - {உரு) என வரும். (உச0) டே சிரியம் : இது, நிறுத்த முறையானே ப8ஆவண்ண மூணர்த்துதல் நுதலிற்று. 1 . இச்சூத்திரவுரை சிதைந்துள்ளது. 2. சொற்சீர்த்துஆகி-சொற்சீரடிகளையுடையதாகி. நூல்-குத்திரயாப். பான் இயற்றப்படும் இலக்கண நூல். தொல்காப்பியமாகிய இந்நூல் இங்குக்கூறிய பாஅவண்ணத்திற்குரிய இலக்கியமாகத் திகழ்தல் காணலாம்.