பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ.க தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நச்சினார்க்கினியம் : இ-ள்.) இரண்டளபெடையும் பயிலச் செய்வது. எறும் உ-ம். "மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்” கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்” எனவரும். 'தாஅம் படுநர்க்குத் தண்ணி ருளகொல்லோ வாஅம் பல்விழி யன்பனை யறிவுறில் வாஅம் புரவி வழுதியொ டெம்மிடைத் தோஒ நுவலுமிவ் வூர்” ஃதளபெடைத் தொடையாம். த மே த ஆய்வுரை : இஃது, அளபெடை வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ஸ்). அளபெடை பயின்று வருவது அளபெடை வண்ணமாகும் எ-று. உகஉ நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். இளம்பூரணம் : என்-எனின். நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இள். நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு.? “நீரூர் பானா யாறே காடே நீலூர் காயாப் பூவி யாவே காரூர் பானா மாவே யானே யாரோ தாமே வாழா மோரே ஊரூர் பாகா தேரே பீரூர் தோளாள் பேரூ ராளே” (யாப். வி. ப. க.அங்) என வரும். (உக உ) y 1. அளபெடை' எனப் பொதுப்படக் கூறினாராயினும் உயிரளபெடை. ஒற்றளபெடை இரண்டையும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 2. நெடுஞ்சீர் என்றது, நீரூர், பானா என்றாற்போன்று நெட்டெழுத்துக் கனாலியன்ற சீர்களை .