பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/799

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅைஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உகங் குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். இாைம்பூரணம் : என்--எனின் குறுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இகள்) குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு. "உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி அவரை பொரிதளை யவிழக் குறிவரு பருவம் இதுவென மறுகுபு செறிதொடி நலமிலை யழியல் அறியலை அரிவை கருதிய பொருளே’ (யாப். வி. ப. அச) எனவரும். (உகங்) பேராசிரியம் : (இ-ஸ்.) குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர்வண்ணம் (எ-று). 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' (அகம் 4:) எனவரும்.2 (உ.உ) நச்சினார்த்தினியம் : இது குறுஞ்சீர்வண்ணங் கூறுகின்றது. (இ.ஸ்.) குறுஞ்சீர்வண்ணமாவது குற்றெழுத்து மிக்குவரும் எ-டு). 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' (அகம் ச) என வரும். 'உறுபெய லெழிவி. கருதிய பொருளே’ இதுவும் மிறைக்கவியாம்.8 1. குறுஞ்சீர் என்றது உறுபெயல், எழிலி யென்றாற்போன்று குற்றெழுத்துக்களாலியன்ற சீர்களை, 2. குற்றெழுத்தால் இயன்றசீர் குறுஞ்சீர் எனப்பட்டது. 3. குறுஞ்சீர்வண்ணம் பயின்று வரும் செய்யுளும் சித்திரகவியாகும் எனக். கொள்வர் நச்சினார்க்கினியர்.