பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/803

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ க்உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உகக அகப்பாட்டு வண்ணம் முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. இளம்பூரணம் : என்-எனின். அகப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்) அகப்பாட்டு வண்ணமாவது முடியாத்தன்மையான் முடிந்ததன் மேலதென்றவாறு. "பன்மீன் உணங்கற் படுபுள் ளோப்பியும் புன்னை நுண்தாது நம்மொடு தொடுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி தோழி நீங்காமை சூளில் தேற்றியும் மணந்ததற் கொவ்வான் தணந்து புறமாறி இணைய னாகி ஈங்குனைத் துறந்தோன் பொய்த லாயத்துப் பொலங்கொடி மகளிர் கோடுயர் வெண்மணல் ஏறி ஒடுகலம் எண்ணும் துறைவன் தோழி’ (யாப். வி. ப. க.அரு) என வரும். (உகசு) பேராசிரியம் ; (இ.ஸ்.) அகப்பாட்டு லண்ணமென்பது இறுதியடி இடையடி போன்று நிற்பது (எ-று). அவையாவன: முடித்துக் காட்டும் ஈற்றசை ஏகாரத்தா னன்றி, ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன; அவை "தலழ்பவை தாமு வவற்றோ ரன்ன" (தொல்-மர:5) எனவும், 'உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னகய்' எனவும், (ஐங்குறு; 2t} 1. சொல்லக்கருதியபொருள் முற்றுப்பெற்ற நிலையில் செய்யுள் முடியாதது போன்று அமைந்த ஒசைத்திறம் அகப்பாட்டு வண்ணமாகும், செய்யுளின் எல்லைக்குள் அகப்பட்டு ஒடுங்கிய பொருளையுடையதாய்ச் செய்யுள் முடியாதுபோன்றமைந்த ஒசைத்திறம் அகப்பாட்டுவண்ணமாகும். அகப்படுதல்-கூறக்கருதியபொருள் செய்யுளில் அடங்குதல்.