பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/824

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெேசய்யுளியல் - நூற்பா உஉக, கCகங் வற்றோடு உறழ நூறாகும். அவற்றைக் குறிலகவற் றுங்கிசை வண்ணம், நெடிலகவற்றுங்கிசை வண்ணம் என ஒருசார் ஆசிரியர் பெயரிட்டு வழங்குப” என இளம்பூரணர் கூறும் விளக்கம் பிற்கால யாப்பிலக்கண மரபை அடியொற்றியமைந்ததாகும் 'துாங்கேந் தடுக்கல் பிரிதல் மயங்கிசை வைத்துப்பின்னும் ஆங்கே யகவல் ஒழுகிசை வன்மையு மென்மையுமா ஆங்கே குறில்நெடில் வல்லிசை மெல்லிசை யோடிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே” எனவரும் யாப்பருங்கலக்காரிகையும், 'துங்கிசை வண்ணம், ஏந்திசைவண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசைவண்ணம், மயங்கிசைவண்ணம், என இவ்வைந்தினையும்; அகவல்வண்ணம், ஒழுகல்வண்ணம், வல்லிசைவண்ணம், மெல்லிசைவண்ணம் என்று இந்நான்கினையும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்துவண்ணம், வல்லெழுத்துவண்ண்ம், மெல்லெழுத்துவண்ணம், இடையெழுத்துவண்ணம் என இவ்வைந்தினையுங் கூட்டிக் குறிலகவற்றுங்கிசைவண்ணம். நெடிலக வற்றுரங்கிசை வ ண் ೧T h, வலியகவற் றுங்கிசை வண்ணம், மெலியவசுற்றுரங்கிசைவண்ணம், இடையகவற் றுங்கிசைவண்ணம் என்று இவ்வாறெல்லாம் உறழ்ந்து கொள்ள நூறுவண்ண விகற்பமாம்” எனவரும் யாப்பருங்கலவிருத்தியுரையும் இங்கு நோக்கத்தக்கன. 'நான்கு பாவினோடும் இவற்றை (இருபது வண்ணங்களையும்) வைத்து உறழவும், பொதுப்பா இரண்டினோடு உறழவும், நூற்றிருபதாகலும் உயிர்மெய் வருக்கம் எல்லா வற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் சிலபெயர் நிறீஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறை யிலவாகலும் உடையவாயினும் இவ்விருபது வகையான் அல்லது சந்த வேற்றுமை விளங்காதென்பது கருத்து’ எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் வண்ணம் இருபதே என வரையறுத்த ஆசிரியர் தொல்காப்பினார் கருத்தினை நன்கு புலப்படுத்துவதாகும்.